கபாலி வெற்றி அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த்

Last Updated : Jul 26, 2016, 06:11 PM IST
கபாலி வெற்றி அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த் title=

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'கபாலி' படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ரஜினி தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான படம் கபாலி. இப்படத்தில் தொடர்ந்து நடித்ததால் அமெரிக்காவில் ஓய்வெடுத்தேன். 'கபாலி' வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விபட்டதை இன்று நேரடியாக பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். அமெரிக்காவில் ஓய்வெடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்துகொண்டும், நலமாக, ஆரோக்கியமாக தமிழகம் திரும்பினேன். 2 மாதம் ஓய்விற்குப் பின் ஆரோக்கியமாக தாயகம் திரும்பியுள்ளேன். தாணு மற்றும் ரஞ்சித் உள்ளிட்ட கபாலி படக்குழுவினருக்கு நன்றி, மேலும் ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் தலைவணங்கி மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  "மகிழ்ச்சி" என்று தெரிவித்திருக்கிறார்.

Trending News