India Nationa Cricket Team Defeats, Rewind 2024: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணிக்கு இந்தாண்டு ஏற்ற இறக்கமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டி இரண்டையும் தவறிவிட்ட இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
2024ஆம் ஆண்டில் இந்திய அணி பல மாற்றங்களை சந்தித்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் டி20இல் ஓய்வை அறிவித்தனர். டி20 கேப்டன்ஸி ரோஹித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியா பக்கம் போகாமல் சூர்யகுமார் யாதவ் வசம் சென்றது. இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடிக்க திணறிய வேளையில் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர்.
டி20 ஒருபுறம் இருக்க ஒரே ஒரு ஓடிஐ தொடரில் மட்டுமே இந்தியா விளையாடியது. அதையும் கைப்பற்றவில்லை. வரும் பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இருக்கும் சூழலில், அதற்கு முன் ஜனவரியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஓடிஐ போட்டிகளில் மட்டும் இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த முறை கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க இங்கு இந்திய அணிக்கு இந்தாண்டின் மறக்க முடியாத தோல்விகளை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | 'உங்கள் சேவைக்கு நன்றி' - ரோஹித் ஷர்மாவின் ஓய்வு தேதி இதுதான்!
இந்திய அணியை சுருட்டிய நியூசிலாந்து
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தது. இந்திய அணி வங்கதேசத்தை 2-0 என்ற கணக்கில் வென்று புத்துணர்ச்சியுடன் நியூசிலாந்து தொடருக்குள் வந்தது. பெங்களூரு, புனே, மும்பை ஆகிய மூன்று நகரங்களில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்று இந்தியாவை 0-3 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்தது.
- 24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி முதல்முறையாக சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வைட்வாஷ் ஆகி இழந்திருக்கிறது.
- 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தாண்டில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
- 19 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை வான்கடே மைதானத்திலும் இந்திய அணி இந்தாண்டில்தான் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.
- 36 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் இந்திய அணி இந்தாண்டில்தான் டெஸ்ட் தொடரை இழந்தது.
- 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளை இந்தாண்டில் இழந்துள்ளது. நியூசிலாந்துடன் 3 போட்டிகளிலும், இங்கிலாந்துடன் 1 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.
- இந்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 46 ரன்களை எடுத்ததன் மூலம் இந்திய அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் மட்டுமின்றி, சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் ஆக பதிவானது. ஆசிய கண்டத்திலும் ஒரு அணியின் குறைந்த ஸ்கோர் இதுவே ஆகும்.
மேலும் படிக்க | இந்திய அணியில் இருந்து உடனே தூக்க வேண்டிய வீரர்கள்... சிட்னியில் ஜெயிக்க ஒரே வழி!
இலங்கை ஓடிஐ தொடர்
டி20 உலகக் கோப்பையை வென்ற கையுடன் இலங்கைக்கு வந்து டி20 தொடரை வென்றாலும், ஓடிஐ தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது.
- இலங்கை மண்ணில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி முதல்முறையாக ஓடிஐ தொடரை இழந்தது.
- அதுமட்டுமின்றி இந்தாண்டில் இந்த ஒரே ஒரு ஓடிஐ தொடரில் மட்டுமே இந்திய அணி விளையாடியது. அதிலும் இந்தியா ஒரு போட்டியை கூட வெல்லாததால் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டில்தான் ஒரு ஓடிஐ போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை.
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்த சோகம்
- இன்று மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு நடந்த சர்வதேச போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது.
- கடைசியாக இங்கு 2011ஆம் ஆண்டில் மட்டுமே டெஸ்ட் போட்டியை இந்தியா இழந்தது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் இப்போது இழந்துள்ளது.
- 10 ஆண்டுகளுக்கு பின்னர் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் தற்போது தோல்வியடைந்துள்ளது.
மேலும் படிக்க | IND vs AUS: 4வது டெஸ்டில் தோல்விக்கு பிறகு ரோஹித் சர்மா சொன்ன முக்கிய விஷயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ