மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவலை தொடர்ந்து பாதுரியா பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது நிலைமை லேசாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம், கர்வால் மாவட்டத்தில் உள்ள சட்புலி நகரில் இதேபோன்று ஒரு வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சட்புலி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் கேதர்நாத் தலத்தை பற்றி பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் உத்தரகாண்டிவில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு பிளாஸ்டிக் அரிசி வராமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் நுகர்வோர் தேவைக்கேற்ப 3 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அரிசி விலையும் கட்டுக்குள் இருக்கிறது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. அரிசியில் நடக்கும் இந்தக் கலப்படம் குறித்த செய்திகள், சமீப வாரங்களாக சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவிவருகின்றன.
உண்மையில் பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. இந்த பிளாஸ்டிக் அரிசி சீனாவில் தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது. இதுபோன்ற பிளாஸ்டிக் அரிசிகள் தனியாக விற்பனை செய்யப்படுவது கிடையாது. அவை உண்மையான அரிசியுடன் கலக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் நடந்தது என்பதை உறுதிசெய்யும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது பரவலாக இருந்து வந்தது.
உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால் சுமார் 15,000 சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணுபிரயாக் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் விஷ்ணுபிரயாக் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
15,000 மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று சென்று வழிபாடு செய்தார்.
காலை 9.30 மணிக்கு கேதார்நாத் கோயிலுக்கு சென்ற மோடி, அங்கு சிவனுக்கு நடக்கும் ருத்ரஅபிஷே கத்தில் கலந்து கொண்டார்.
Uttarakhand: Prime Minister Narendra Modi greets the crowd at Kedarnath temple pic.twitter.com/ynwSAqSZl5
— ANI (@ANI_news) May 3, 2017
உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று பாஜக ஆட்சியில் உள்ள பிற 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அதன் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கூடங்களுக்கு கடந்த திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்ட திரிவேந்திரசிங் ராவத் இன்று பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். ராவத்துக்கு உத்தராகண்ட் ஆளுநர் கிரிஷன காந்த பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
உத்தரகாண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்ட திரிவேந்திரசிங் ராவத் இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்
நடைபெற்று முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக்கட்சி 57 இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றியது. அங்கு முதல்–மந்திரி பதவிக்கு 3 முன்னாள் முதல்–மந்திரிகள் உள்பட 6 பேர் கடும் போட்டியில் இறங்கினர். அவர்களில் முன்னாள் மத்திய மந்திரி சத்பால் மகாராஜ், பிரகாஷ் பந்த் உள்ளிட்டவர்கள் அடங்குவர்.
உத்தரகண்ட் மாநில முதல்வராக பா.ஜ.,வின் திரிவேந்திர சிங் ராவத் தேர்வு. நாளை (மார்ச் 18) பதவியேற்க உள்ளார்.
உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த முதல்வராக யார் என்பதை தேர்வு செய்ய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடந்தது. இதில் சட்டசபை குழு தலைவராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டன.
உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகம் தெரிகிறது. பஞ்சாபில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் அதன் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் இழுபறி நிலை வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 69 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.