உத்தரகாண்ட்: பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தால் வன்முறை

Last Updated : Jul 10, 2017, 11:27 AM IST
உத்தரகாண்ட்: பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தால் வன்முறை title=

மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவலை தொடர்ந்து பாதுரியா பகுதியில் கலவரம் ஏற்பட்டது. 

நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது நிலைமை லேசாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம், கர்வால் மாவட்டத்தில் உள்ள சட்புலி நகரில் இதேபோன்று ஒரு வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சட்புலி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் கேதர்நாத் தலத்தை பற்றி பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது.

Trending News