ஜெய்ஹிந்த் முழக்கம் தொடர்பான சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இல்லை என்பதை பெருமையாக பேசிய திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவின் பேச்சு சர்ச்சைகளை கிளப்பியது. அது தொடர்பாக பாஜக கடுமையான கண்டனங்களை எழுப்பியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் நடந்த சட்டபேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, முதல்வர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் முன்னதாகவே வருகை தந்தனர்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.
நாளை கலைவாணர் அரங்கில் தொடங்கும் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாதவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
சட்டசபை உறுப்பினர்கள் யாரும் சட்டசபைக்கு உள்ளே செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றிப்பதால், சபைக்கு வெளியே உள்ள லாக்கரில் அனைவரும் செல்போனை வைத்துவிட்டுச் செல்ல ஒரு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்காக, இயல்பு வாழ்க்கை திரும்பிட இணைந்து நிற்போம் என்று புதிதாக பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி அட்சிக்கு வந்துள்ளதால், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பதவியேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய அமைச்சரவையில், இன்று முக்கிய நிர்வாக பதவிகளுக்கான நியமனங்கள் நடந்து வருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார். சென்னையின் புதிய காவல் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக தளபதி இன்று தமிழகத்தின் தலைவரானார்!! முதல்வரானார் மு.க. ஸ்டாலின்!! அரசியலை பிறப்பு முதலே சுவாசித்து, நேசித்து, வாசித்து, தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதியின் புதல்வனாகப் பிறந்து இன்று தமிழகத்தின் முதல்வராக உயர்ந்துள்ளவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தளபதி இன்று தமிழகத் தலைவராகிறார்!! முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்!! அரசியலை பிறப்பு முதலே சுவாசித்து, நேசித்து, வாசித்து, தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதியின் புதல்வனாகப் பிறந்து இன்று தமிழகத்தின் தலைவனாக உயர்ந்துள்ளவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிப்பாக தமிழகத்துக்கு நல்லாட்சி தருவார் என்றும், அண்ணன் என்ற முறையில் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக இன்று தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியதோடு, பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆளுநரிடம் பேசியதாகத் தெரிகிறது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறுவிப்பு தற்போது நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியாகக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.