சென்னை: திமுக தளபதி இன்று தமிழகத்தின் தலைவரானார்!! முதல்வரானார் மு.க. ஸ்டாலின்!!
அரசியலை பிறப்பு முதலே சுவாசித்து, நேசித்து, வாசித்து, தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதியின் புதல்வனாகப் பிறந்து இன்று தமிழகத்தின் தலைவனாக உயர்ந்துள்ளவர் மு.க.ஸ்டாலின். மு.கருணாநிதிதியை தந்தையாகக் கொண்டு அபரிதமான அன்பைப் பெற்ற ஸ்டாலின், அவரை தலைவனாகக் கொண்டு அரசியலையும் கற்றுக்கொண்டார். சிறு வயதிலேயே களப்பணியாற்றி மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றார். திமுக கட்சியின், கட்சித் தொண்டர்களின் தளபதியாக இருந்து அவர்களை வழி நடத்திய மு.க. ஸ்டாலின், இன்று தமிழக மக்களின் தலைவனாக, மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் அனைத்து அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர். தமிழகத்தின் 23 ஆவது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க. ஸ்டாலின்.
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக 133 இடங்களிலும், அதிமுக 66 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 14 இடங்களிலும், பாரதீய ஜனதா கட்சி 4, பாட்டாளி மக்கல் கட்சி 5, விடுதலை சிறுதைகள் கட்சி 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வென்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.
7 May, 2021: 10:15 PM
தமிழக ஆளுநர் மாளிகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்களின் பதவியேற்பு விழா நிறைவு பெற்றது. தமிழகத்தின் 23 ஆவது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க. ஸ்டாலின்.
7 May, 2021: 9:20 PM
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஒவ்வொரு அமைச்சராக பதவி பிரமாணமும் இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்துக்கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய சட்டசபையின் அமைச்சர்கள் ஒவ்வொருவராக பொறுப்பேற்கிறார்கள்
7 May, 2021: 9:12 PM
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.....' எனத் தொடங்கி பதவியேற்றார் மு.க.ஸ்டாலின். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
Chennai: DMK Chief MK Stalin takes oath as the Chief Minister of Tamil Nadu.
He is being administered the oath by Governor Banwarilal Purohit pic.twitter.com/e8IZT1aNFz
— ANI (@ANI) May 7, 2021
7 May, 2021: 9:10 PM
இன்னும் சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா துவங்கவுள்ளது. முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் விழா மேடையை அடைந்தனர்.
7 May, 2021: 9:02 PM
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழாவுக்கு வந்தார். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்கவுள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
7 May, 2021: 9:00 PM
தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆளநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு விழா எளிமையாக நடைபெற்று வருகிறது.
7 May, 2021: 8:55 PM
தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார். இன்னும் சற்று நேரத்தில் அவர் தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்பார்.
7 May, 2021: 8:45 PM
தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள விழா மையத்திற்கு புறப்பட்டார்.
7 May, 2021: 8:40 PM
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு. அவருடன் அதிமுக சார்பில், நவநீதகிருஷ்ணன், முன்னாள் சபா நாயகர் தனபால் ஆகியோரும் விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளனர்.
7 May, 2021: 8:20 PM
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள விழாவில் நடிகரும் அனைத்து இந்திய மக்கள் சமத்துவக் கட்சி தலைவர் சரத்குமார் பங்கேற்க வந்துள்ளார். 'ஒரு இக்கட்டான சூழலில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்' என வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்.
7 May, 2021: 8:15 PM
திமுக தலவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 8:45 மணியளவில் அவர் இல்லத்தில் இருந்து பதவியேற்பு விழாவிற்கு புறப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதலமைச்சராக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலிநுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமானமும் இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR