"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று நபிகள் நாயகம் சொன்னது வேதவாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், கருஞ்சீரக எண்ணெயை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகத்தின் வாக்குக்கு ஏற்ப அரபு நாடுகளிலும் கருஞ்சீரகம் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயம் என்ற பெயர் நாம் தினசரி கேட்பது என்பதால் அதன் உண்மையான பயன்கள் தெரியாமல் அதை சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். வெந்தயம், உணவுப்பொருள் (Food) மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்பு சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
மஞ்சள் நமது உணவின் சுவையை கூட்டுவது, மருத்துவ பண்புகள் கொண்டது என்று தெரியும். ஆனால், இதில் அழகுக்கு அழகு சேர்க்கும் பண்புகளும் இருக்கின்றன. அதனால் தான் மஞ்சளையும் நமது பாரம்பரியத்தில் மங்கலப் பொருளாக சேர்த்து, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மஞ்சளுக்கு பிரதான இடம் கொடுக்கிறார்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.