spice: லட்சக்கணக்கான மலர்களில் இருந்து மலரும் உலகிலேயே விலை அதிகமான மசாலா!

வைரத்தை விட விலை அதிகமான மசாலா எது தெரியுமா? சுமார் ஒன்றரை லட்சம் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் அபூர்வ மசாலா...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 11:20 AM IST
  • உலகிலேயே விலை அதிகமான மசாலா!
  • லட்சக்கணக்கான மலர்களில் இருந்து 1 கிலோ மசாலா கிடைக்கும்
  • மணக்கும் இந்த மசாலா, அழகை மிளிரச் செய்யும்
spice: லட்சக்கணக்கான மலர்களில் இருந்து மலரும் உலகிலேயே விலை அதிகமான மசாலா! title=

புதுடெல்லி: மசாலா என்பது உணவின் சுவையை அதிகரிக்கும். நாம் உணவில் பல்வேறு வகையான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஒரு மசாலாவின் விலை, வைரத்தை விட அதிகம். அந்த மசாலா எது தெரியுமா?  

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா 'சிவப்பு தங்கம்' (Red Gold) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, ​​இந்த மசாலாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை என்பது ஆச்சரியம் அளித்தாலும் உண்மையான விலை தான் இது. செடிகளில் இருந்து கொய்யப்படும் சுமார் ஒன்றரை லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கிறது. ஒரு பூவில் இருந்து மூன்று குங்குமப்பூ மட்டுமே கிடைக்கும் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும்.  

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா
குங்குமப்பூ உலகில் காணப்படும் மிகவும் விலையுயர்ந்த மசாலா (Costliest spice in the world) ஆகும். ஒரிஜினல் குங்குமப்பூவின் விலையில் வைர நெக்லசே வாங்கி விடலாம்.  

குங்குமப்பூ கிலோ 3 லட்சம் ரூபாய்  
உணவில் குங்குமப்பூ மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. இந்தியாவில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. குங்குமப்பூ மட்டுமின்றி அதன் செடியும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. குங்குமப்பூ செடி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தாவரமாக கருதப்படுகிறது. 

2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் அலெக்சாண்டரின் படை முதன்முதலில் குங்குமப்பூவை பயிரிட்டதாக கூறப்படுகிறது. குங்குமப்பூ ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. அழகு சாதனப் பொருட்களில் குங்குமப்பூவும் சேர்க்கப்படுகிறது.

spice

உணவுப் பொருட்களில் பளபளப்பான மஞ்சள் அல்லது செம்மை கலந்த மஞ்சள் வண்ணத்தையும் வழங்குகிறது குங்குமப்பூ.  பாரசீகம், அரபியா, மத்திய ஆசியா, ஐரோப்பியா, இந்தியா, துருக்கி மற்றும் கார்ன்வால் நாடுகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் சமையலில் குங்குமப்பூவை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். 

இனிப்புத் தின்பண்டங்களில் மட்டுமல்ல, உயர்ரக மது தயாரிப்பிலும் குங்குமப்பூ பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. குங்குமப்பூவில் புற்றுநோய் எதிர்ப்பு அம்சங்களும் ஆக்சிசனேற்றத் தடுப்பான் போன்ற இயல்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளியை போக்கும் திறன் கொண்ட குங்குமப்பூ, விழித்திரை அழுத்த நோயிலிருந்தும் கண்களைக் காக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளில் துணிச்சாயமாகவும் நறுமணப்பொருள் உற்பத்தியிலும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச அளவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 300 டன் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்படுகிறது.

ALSO READ | புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு அருமருந்தாகும் பழம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News