கொரோனா மருந்து கண்டுபிடிப்பில் பெரும் வெற்றி அடைந்துள்ளதாக பைசர் நிறுவனம் நேற்று அறிவித்ததை அடுத்து, இன்று தங்கத்தின் விலை 10-11-2020 செவ்வாய்க்கிழமை கடும் சரிவைக் கண்டது.
தற்போது உலகளவில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தின் விலையிலும் அதிக மாற்றங்கள் காணப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதால், இது தங்க நகை வாங்க ஏற்ற நேரம் தான். அதனால் தொடர்ந்து விலை குறைந்து வருவது நகை வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
பண்டிகை காலங்களில் வர்த்தகர்கள் முதல் வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வரை அனைவரின் கண்களும் தங்கம் மற்றும் வெள்ளி (Gold and Silver) விலையில் சற்று அதிக கவனம் செலுத்துகின்றன.
தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதனால், சந்தை வல்லுநர்கள் தங்கம் வாங்க இது சரியான நேரம் என அறிவுறுத்துகிறார்கள். இதற்கிடையில், இந்த பண்டிகை காலத்தில், மலிவான தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பைக் மத்திய அரசு கொடுத்துள்ளது.
வெளிநாட்டு சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் இந்திய ரூபாயின் ஏற்றம் ஆகிய காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் காலத்தில், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை உயர்வு காரணமாக இந்திய சந்தையிலும் விலை உயர்ந்துள்ளது
கொரோனா வைரஸ் அச்சம் இன்னும் ஒரு மாதமாவது தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த காலகட்டத்தில் தங்கம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு இது சொர்க்கம் தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.