இன்றும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து!! 3 நாட்களில் ரூ. 2,000 குறைந்தது

உலகளாவிய சந்தைகளில், அமெரிக்க டாலர் (US Dollar) மற்ற நாணயங்களுக்கு எதிராக வலுப்பெற்றதால் தங்கத்தின் விலையும் குறைந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2020, 06:33 PM IST
இன்றும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து!! 3 நாட்களில் ரூ. 2,000 குறைந்தது title=

Today Gold Rate News: இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி (Gold and Silver) விலைகள் லாபத்தை மாற்றியமைத்தன. மேலும் சந்தையின் பிற்பகுதியில் விலை குறைந்தன. எம்.சி.எக்ஸில் (MCX), அக்டோபர் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1.1% குறைந்து 51,552 ரூபாயாகவும், வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.650 குறைந்து ரூ. 66,950 ஆக குறைந்துள்ளது. முந்தைய இரண்டு நாட்களில் தங்கம் (Gold Rate) 10 கிராமுக்கு ரூ. 1,500 சரிந்தது, வெள்ளி ஒரு கிலோவுக்கு 1,650 ரூபாய் ஆக குறைந்தது. இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 56,191 ரூபாயாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய சந்தைகளில், அமெரிக்க டாலர் (US Dollar) மற்ற நாணயங்களுக்கு எதிராக வலுப்பெற்றதால் தங்கத்தின் விலையும் குறைந்தது. ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9% குறைந்து 1,930.46 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.4% குறைந்து 26.87 டாலராகவும் இருந்தது.

வேலையின்மை காரணமாக, வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பித்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 1 மில்லியனுக்கும் மேலாக எதிர்பாராத விதமாக உயர்ந்ததாக சமீபத்திய தகவல்கள் காட்டுகின்றன.

ஆய்வாளர்கள் தங்கத்தின் விலைகள் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Trending News