புது டெல்லி: கொரோனா வைரஸின் காலத்தில், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை உயர்வு காரணமாக இந்திய சந்தையில் (Indian Futures Market) வெள்ளியின் விலை 2013 செப்டம்பருக்கு பிறகு, முதல் முதல் முறையாக ஒரு கிலோ 54000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் காமெக்ஸில் வெள்ளியின் விலையை பார்த்தால், அது 2016 க்குப் பிறகு மிக உயர்ந்த நிலைக்குச் சென்றது. காமெக்ஸில் வெள்ளி ஒரு அவுன்ஸ் $20-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இருப்பினும், தங்கத்தின் விலையில் இவ்வளவு உயர்வு இல்லை.
வரும் நாட்களில் வெள்ளி வரவு குறைய வாய்ப்பு உள்ளது என்ற அச்சத்தின் மத்தியில், கொரோனா காலத்திலும் விலைகள் அதிக அளவில் உயர்வை பெற்றுள்ளன. இதன் காரணமாக தான் சர்வதேச சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று பொருட்கள் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா ஊடங்கில் தளர்வு செய்யப்பட்டு இருப்பதால், தொழில்துறை நடவடிக்கைகள் மேம்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவும் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஐஏஎன்எஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜூலை 20 ம் தேதி இரவு 8.54 மணிக்கு மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்.சி.எக்ஸ்) வெள்ளி (Silver Price) ஒரு கிலோவுக்கு ரூ .54,014 ஆக இருந்தது, எம்.சி.எக்ஸ் விலை கிலோ ஒன்றுக்கு ரூ .54,130 ஆக உயர்ந்தது. இது செப்டம்பர் 2013 முதல் மிக உயர்ந்த மட்டமாகும். முன்னதாக 9 செப்டம்பர் 2013 அன்று, எம்.சி.எக்ஸ் மீது வெள்ளி விலை ஒரு கிலோ ரூ .54,507 ஆக உயர்ந்தது.
எம்.சி.எக்ஸ்சேஞ்சில் தங்கம் 10 கிராமுக்கு ரூ .83 அதிகரித்து ரூ .49,050 ஆக இருந்தது. இது தற்போது 10 கிராமுக்கு ரூ .49,175 உயர்ந்துள்ளது.
உலக அளவில் தொழில்துறை தேவையுடன், நாட்டில் நகைகளுக்கான வெள்ளி தேவையும் இந்த முறை வலுவாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பருவமழை நன்றாக இருப்பதால், இது நல்ல பயிர் விளைச்சலுக்கு வழிவகுக்கும், விளைச்சல் நன்றாக இருக்கும் பட்சத்தில், பொதுவாக கிராமப்புறங்களில் நகைகளுக்கான தேவை அதிகரிக்கும்.