தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தொடர்ச்சியாக குறைந்து வந்த விலை, தற்போது அதிகரித்து வருகிறது..!!

கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.5500 வரை குறைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2020, 05:33 PM IST
  • கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.5500 வரை குறைந்துள்ளது.
  • கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை குறைந்து வந்ததை போலவே வெள்ளியின் விலைகளும் சரிவைக் கண்டன.
  • வெள்ளி ஒரு மாதத்தில் சுமார் ரூ .10,000 வரை குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தொடர்ச்சியாக குறைந்து வந்த விலை, தற்போது அதிகரித்து வருகிறது..!! title=

தங்கம் மற்றும் வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளில், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று  ஏற்றம் காணப்பட்டது.  இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 258 ரூபாய் அதிகரித்து 51,877 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 837 ரூபாய் அதிகரித்து, 69,448 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது

 

கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.5500 வரை குறைந்துள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி 10 கிராமுக்கு 56,200 ரூபாயை எட்டிய தங்க விலை, இப்போது 10 கிராம், ரூ 51,877 ரூபாய் என குறைந்துள்ளது. வெள்ளி விலையும் ஒரு மாதத்தில் ஒரு கிலோவுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.

கடந்த வர்த்தக வாரத்தில் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கம் கடந்த 3 நாட்களில் மட்டும் 10 கிராமுக்கு சுமார் ரூ.800 குறைந்துள்ளது. மறுபுறம், கடந்த 1 மாதத்திற்கான தரவைப் பார்த்தால், தங்கத்தின் விலை சுமார் 5500 ரூபாய் குறைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. 

தங்கம் ஏன் குறைகிறது?

தங்கத்தின் விலை வீழ்ச்சியடைவதற்கு மிகப்பெரிய காரணம்  அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து, அதன் காரணமாக, டாலரின் மதிப்பு உயர்ந்ததே ஆகும். அதனால் தான் இந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியைக் காண்கிறது. ஆகஸ்டில், அமெரிக்காவில் 13.71 லட்சம் வேலைகள் அதிகரித்துள்ளன, இதன் காரணமாக வேலையின்மை விகிதம் 8.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை குறைந்து வந்ததை போலவே வெள்ளியின் விலைகளும் சரிவைக் கண்டன. வெள்ளி ஒரு மாதத்தில் சுமார் ரூ .10,000 வரை குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், வெள்ளி விலை ரூ .1200 என்ற அளவிற்கு அதிகமாக சரிவைக் கண்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஆகஸ்ட் மாதம் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.

மேலும் படிக்க | தொழில் தொடங்க திட்டமா.. 59 நிமிடங்களில் SBI மூலம் முத்ரா கடன் பெறும் எளிய வழி..!!!

Trending News