உலக அளவில் தங்கத்தின் விலைகள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டது.
தேசிய தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .608 என்ற அளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 52,463 ரூபாயாக இருந்தது. நேற்று, தில்லியில, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 53,071 ரூபாயாக இருந்தது.
இதேபோல், முதலீட்டாளர்கள் வெள்ளி வாங்குவதில் மீது சிறப்பு ஆர்வம் காட்டவில்லை. இதனால், வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ .1,214 குறைந்து ரூ .69,242 ஆக உள்ளது. முந்தைய அமர்வில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ .70,456 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1,943.80 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் 26.83 டாலராகவும் குறைந்துள்ளது.
பங்கு சந்தையில் தங்க முதலீட்டிற்கான டிமாண்ட் மிகவும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக, பங்கு சந்தையில் மேற்கொள்ளப்படும் தங்க முதலீட்டில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.78 சதவீதம் சரிந்து ரூ .51,420 ஆக உள்ளது.
சென்னையில் (Gold Rate In Chennai) ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 4,919 -க்கு விற்பனையானது.
வரும் காலங்களிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்துக்கொண்டே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.