சம்பளம் அதிகரிப்பதால், ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளமும், அதாவது டேக் ஹோம் சம்பளமும் அதிகரிக்கும் என ஊழியர்கள் நினைக்கலாம். ஆனால், நிலைமை அப்படி அல்ல. ஊழியர்களுக்கு இதில் ஏமாற்றமே இருக்கப்போகின்றது.
New RBI Rules: பணப் பரிவர்த்தனைகளின் சில முக்கியமான அம்சங்களில் ஆகஸ்ட் 1 முதல் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ரிசர்வ் வங்கி இந்த மாற்றங்கள் குறித்த புதிய விதியைப் பற்றி தெரிவித்துள்ளது. மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.
EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினராக இருந்தால், உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) நாமினி இருக்க வேண்டும்.
புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், அதாவது, டேக் ஹோம் சம்பளம், குறைவது மட்டுமல்லாமல், வரிச்சுமையும் அதிகரிக்கக்கூடும்.
புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் இருக்கும். இந்த ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவிட் தொற்றுநோய், பொருளாதாரம், மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஊதியம் மற்றும் அதிக பொறுப்புகள் என மக்கள் தள்ளாடுகின்றனர். பல நிறுவனங்கள் இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளன...
விரைவில் சம்பளம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் கூட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்! இந்திய ரிசர்வ் வங்கி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு அதாவது 2022 மார்ச் 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2021 ஜூலை முதல் அகவிலைப்படியை மீட்டெடுக்கும் முடிவு சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (dearness allowance (DA)) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DR ஜூலை 1, 2021 முதல் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.
ஊதிய கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் மாதா மாதம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தின் அளவு குறைந்தாலும், அவர்களது பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டியில் அதிகரிப்பு ஏற்படும்.
LIC ஊழியர்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்களுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என LIC நிர்வாகம் நிதி அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
2019 ஊதியக் குறியீடு சட்டம் அமல்படுத்தப்படுவதால், மக்களின் சம்பள அமைப்பு முற்றிலும் மாற்றப்படும். ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு கணிசமாக குறையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.