புதுடெல்லி: அலுவலக ஊழியர்களுக்கு பல வித முக்கிய செய்திகள் காத்திருக்கின்றன. இவற்றில் சில அனுகூலங்களும், சில அதிருப்திகளும் கலந்தே உள்ளன. வரும் காலங்களில் அலுவலக ஊழியர்கள் பல மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும். பணி நேரம், ஊதிய அமைப்பு, வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஜுவிட்டி ஆகியவற்றில் பல மாற்றங்களை ஊழியர்கள் காண்பார்கள்.
சமீபத்திய ஊடக அறிக்கையின்படி, ஊதிய கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் மாதா மாதம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தின் அளவு குறைந்தாலும், அவர்களது பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டியில் அதிகரிப்பு ஏற்படும்.
புதிய ஊடக அறிக்கைகள் ஊழியர்களின் கிராஜுவிட்டி மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) அதிகரிக்கும் அதே நேரத்தில் அவர்கள் கையில் பெறும் ஊதியம் குறையும் என்று கூறியுள்ளன.
ஊதியத்தின் (Salary) புதிய வரையறையின் கீழ், மொத்த சம்பளத்தில் கொடுப்பனவுகளின் அளவு அதிகபட்சமாக 50 சதவீதமாக இருக்கும். அடிப்படை சம்பளம் ஏற்கனவே 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அடிப்படை சம்பளம் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் மாத சம்பளத்தில் மாற்றத்தைக் காண்பார்கள். பி.எஃப் கணக்கீடு அடிப்படை சம்பளதை சார்ந்து இருப்பதால், அடிப்படை சம்பளத்தின் அதிகரிப்பு காரணமாக, பி.எஃப் மீதான பங்களிப்பும் அதிகரிக்கும்.
புதிய விதிகள் அதிக கொடுப்பனவு கூறுடன் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பை பாதிக்கும். பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி (Gratuity) அதிகரிப்பது நிறுவனங்களின் செலவை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் இவற்றுக்கான பங்களிப்பு விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கும்.
ALSO READ: இன்று முதல் மாற இருக்கும் 5 முக்கிய விதிகள் என்னென்ன? இதோ முழு விவரம்!
ஊதியக் குறியீடு மசோதா (ஊதிய மசோதா 2019) 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 1 முதல் புதிய தொழிலாளர் குறியீட்டில் விதிகளை அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டது. எனினும், மாநிலங்கள் இந்த மாற்றத்திற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளவும், நிறுவனங்கள் தங்கள் ஹெச்.ஆர் கொள்கைகளில் இதற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வரவும் இன்னும் அவகாசம் தேவைப்பட்டதால், அரசாங்கம் இந்த மாற்றத்தை அமல்படுத்துவதை தள்ளி வைத்தது.
புதிய வரைவுச் சட்டம் அதிகபட்ச பணி நேரத்தை 12 ஆக உயர்த்த முன்மொழிந்துள்ளது. ஒரு ஊழியர் கூடுதலாக 15 முதல் 30 நிமிடங்கள் பணிபுரிந்தால், அது 30 நிமிடங்களுக்கான ஓவர்டைமாக (மேலதிக நேரமாக) கணக்கிடப்படும் என்பதையும் OSCH குறியீட்டின் வரைவு விதிகள் குறிப்பிடுகின்றன.
தற்போதைய விதிகளின்படி, ஒரு ஊழியர் 30 நிமிடங்களுக்கும் குறைவாக கூடுதல் வேலை செய்திருந்தால், அது கூடுதல் நேரமாக (ஓவர்டைமாக) கருதப்படுவதில்லை. வரைவு விதிகள் எந்தவொரு பணியாளரும் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றுவதை தடைசெய்கின்றன. 5 மணிநேரம் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு அரை மணி நேரம் ஓய்வு கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.
இதற்கிடையில், கிராஜுவிட்டி மற்றும் பி.எஃப் (PF) ஆகியவற்றிற்கான பங்களிப்பில் ஏற்படும் அதிகரிப்பு ஓய்வு பெற்ற பிறகு பெறப்படும் தொகையை அதிகரிக்கும். இது அதிகபட்ச ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை எளிதாக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR