COVID-19 Bonus: கொரோனா இக்கட்டிலும் ஊழியர்களுக்கு 1 லட்ச ரூபாய் போனஸ் கொடுக்கும் நிறுவனம்!

கோவிட் தொற்றுநோய், பொருளாதாரம், மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஊதியம் மற்றும் அதிக பொறுப்புகள் என மக்கள் தள்ளாடுகின்றனர். பல நிறுவனங்கள் இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளன...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2021, 07:16 PM IST
  • கொரோனா இக்கட்டிலும் ஊழியர்களுக்கு 1 லட்ச ரூபாய் போனஸ் கொடுக்கும் நிறுவனம்!
  • தொற்றுநோயால் ஏற்படும் கஷ்டங்களை சமாளிக்க போனஸ்
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மனமுவந்த பரிசு
COVID-19 Bonus: கொரோனா இக்கட்டிலும் ஊழியர்களுக்கு 1 லட்ச ரூபாய் போனஸ் கொடுக்கும் நிறுவனம்! title=

கொரோனா தொற்றுநோய், மக்களின் வாழ்க்கை முறையே மாற்றி, பலரின் வேலைவாய்ப்புகளை பறித்துவிட்டது. இப்படிப்பட்ட வருத்தமான செய்திகளையே கேட்டு சலித்து போயிருக்கும் நிலையில், தனது ஊழியர்களுக்கு உதவுவதற்காக மிகப்பெரிய முடிவை எடுத்திருக்கிறது ஒரு நிறுவனம்.
 
கோவிட் தொற்றுநோய், பொருளாதாரம், மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஊதியம் மற்றும் அதிக பொறுப்புகள் என மக்கள் தள்ளாடுகின்றனர். பல நிறுவனங்கள் இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளன. அதில் முதன்மையான நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது மைக்ரோசாப்ட்.

மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (Microsoft) தனது ஊழியர்களுக்கு 1,500 டாலர் தொகையை போனஸாக வழங்கவிருப்பதாக, வெர்ஜ் (Verge) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊழியர்கள் தற்போது அலுவலக வேலையை வீட்டில் இருந்தே செய்வது (work from home) மற்றும் தொற்றுநோயால் ஏற்படும் கஷ்டங்களை சமாளிக்க இந்த போனஸ் தொகை கொடுக்கப்படுகிறது.

Also Read | மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 அறிமுகம்

மைக்ரோசாப்டின் தலைமை மக்கள் அதிகாரி (Chief People Officer) கேத்லீன் ஹோகன் வியாழக்கிழமை (ஜூலை 8) போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உலகளவில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை போனஸ் கொடுக்கப்படும்.

ஊழியர்களுக்கு கொடுக்கப்படுட்ம் இந்த சிறப்பு போனஸ் தொகையால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சுமார் 200 மில்லியன் டாலர்கள் செலவாகும். இவ்வளவுப் பெரியத் தொகையை தனது பணியாளர்களுக்காக செலவளிப்பது நிறுவனத்தின் நல்லெண்ணத்தை நிரூபிக்கிறது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் மற்றும் மைக்ரோசாப்டின் கிட்ஹப் (Microsoft’s GitHub), லிங்க்ட்இன் (LinkedIn) மற்றும் ஜெனிமேக்ஸ் (Zenimax) துணை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த போனஸ் பெற தகுதி பெறமாட்டார்கள்.

Also Read | மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராக நியமனம்

சிஎன்பிசியின் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் முதல் காலாண்டின் இறுதியில் 125 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளை செய்துள்ளது.

கார்ப்பரேட் துணைத் தலைவர் மட்டத்திற்குக் கீழே உள்ள பணியாளர்கள் மற்றும் மார்ச் 31, 2021 க்கு முன்னர் நிறுவனத்தில் சேர்ந்தவர்களும் போனஸுக்கு தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் சுமார் 175,508 பேர் பணியாற்றுகின்றனர்.

Also Read | பில் கேட்ஸ்- மெலிண்டா இடையிலான பிளவிற்கு காரணம் ’Jeffrey Epstein’ என்பது உண்மையா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News