Big News: புதிய ஊதியக் குறியீடு இப்போதைக்கு அமலுக்கு வராது, சம்பளம், PF-ல் எந்த மாற்றமும் இல்லை

2019 ஊதியக் குறியீடு சட்டம் அமல்படுத்தப்படுவதால், மக்களின் சம்பள அமைப்பு முற்றிலும் மாற்றப்படும். ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு கணிசமாக குறையும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2021, 02:44 PM IST
  • ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குறியீடு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • இப்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • மாத சம்பளம் பெறுபவர்களின் சம்பளம் அப்படியேதான் இருக்கும், அதில் எந்த மாற்றமும் இருக்காது.
Big News: புதிய ஊதியக் குறியீடு இப்போதைக்கு அமலுக்கு வராது, சம்பளம், PF-ல் எந்த மாற்றமும் இல்லை  title=

ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குறியீடு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இப்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய ஊதியக் குறியீடு தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு, மாத சம்பளம் பெறுபவர்களின் சம்பளம் அப்படியேதான் இருக்கும், அதில் எந்த மாற்றமும் இருக்காது.

புதிய ஊதியக் குறியீட்டை ஒத்திவைப்பதை EPFO வாரிய உறுப்பினர் விர்ஜேஷ் உபாத்யாய் உறுதிப்படுத்தியுள்ளார். 

புதிய ஊதியக் குறியீடு குறித்து இன்னும் விவாதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். முடிவுக்கு வந்தவுடன் விரைவில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும்.

புதிய ஊதியக் குறியீடு  கடந்த பல நாட்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இது குறித்து அரசாங்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. ஒருபுறம்,புதிய ஊதியக் குறியீடு செயல்படுத்தப்படுவதாக சிலர் கூறிக்கொண்டிருக்கும்போது, ​​மும்மொழியப்பட்ட புதிய ஊதியக் குறியீட்டில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் ஒரு சாரார் கூறி வந்தனர். 

புதிய ஊதியக் குறியீடு

ஊதியக் குறியீடு சட்டம் (New Wage Code), 2019 இன் படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் அவரது CTC-யில் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது. இப்போது பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை கணிசமாகக் குறைத்து, கூடுதல் கொடுப்பனவுகளை வழங்குகின்றன. இதனால் நிறுவனத்தின் சுமை குறைகிறது. 

ALSO READ:வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் பிரச்சனை வரும்

புதிய ஊதியக் குறியீடு சம்பள கட்டமைப்பை மாற்றும்

2019 ஊதியக் குறியீடு சட்டம் அமல்படுத்தப்படுவதால், மக்களின் சம்பள அமைப்பு முற்றிலும் மாற்றப்படும். ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு கணிசமாக குறையும். ஏனென்றால் அடிப்படை ஊதிய உயர்வால் ஊழியர்களின் பி.எஃப் அதிகரிக்கும். இது அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாதுகாப்பாக மாற்றும்.

பி.எஃப் (PF) உடன், மாதாந்திர கிராஜுவிட்டி பங்களிப்பும் அதிகரிக்கும். இந்த வழியில் டேக் ஹோம் சம்பளம் குறைந்தாலும், பணியாளர் ஓய்வூதியத்தில் அதிக தொகையைப் பெறுவார்கள்.

மற்ற புதிய குறியீடுகளும் அமலுக்கு வராது

ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு, சமூகப் பாதுகாப்புக் குறியீடு (social security code), தொழில்துறை இணைப்புகள் மற்றும் தொழில் பாதுகாப்பு (code on industrial relations), சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (code on occupational safety, health and working conditions) ஆகியவையும் செயல்படுத்தப்படாது.

சமூக பாதுகாப்பு குறியீடு  (social security code)

சமூகப் பாதுகாப்பு குறியீடு மூலம் நிறுவனத்தில் ஒரு ஊழியரின் ஒப்பந்தம், நாள் நேர அளவுகளைப் பொருட்படுத்தாமல், கிராஜுவிட்டி உரிமை பெறும் உரிமையை வழங்குகிறது. இப்போதுள்ள சூழலில், ஒரு நிறுவனத்தில் பணியாளர் 5 வருட பதவிக்காலத்தை நிறைவு செய்த பின்னரே அவருக்கு கிராஜுவிட்டி (Gratuity) கிடைக்கும் என்ற விதி உள்ளது. 

ALSO READ: Gold / Silver Price Today, March 31, 2021: தங்கத்தின் விலை அதிகரித்தது, இன்றைய விலை என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News