கோவில்கள் பக்தர்கள் கையில் இருந்தால் தங்கள் உயிரே போனாலும் அதை பத்திரமாக பார்த்து கொள்வார்கள். அவர்கள் கோவில்களை தங்கள் உயிருக்கும் மேலாக மதிப்பாக வைத்து கொள்வார்கள் என்கிறார் சத்குரு
வாழ்வின் தீவிரம் தாண்டி வேறெதையுமே சிந்திக்காதவர். அச்சம், தயக்கம், என்ற எதுவுமே இன்றி எப்போதும் நெருப்புக் குழம்பு போல் தகித்தவர். இயற்கையின் விதிகளில் கூட அடங்காதவர். அவர் இப்படித்தான் என்று வரையறுக்க முடியாத, அறிவிற்குப் புலப்படாத, கட்டுக்கடங்காதவர் அவர்
தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது முட்டாள்தனமும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஏர் இந்தியாவை, திரு. JRD டாட்டா தொடங்கி இருந்த சமயம் அது. மூன்று வருடத்தில், இம்பீரியல் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் ஆகியோர் இது எப்படி இவ்வளவு திறமையாக நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆள் அனுப்பினார்கள். ஆனால் அப்படி திறமையாக ஒருவர் நடத்தினால் நமக்கு பிடிக்காதோ என்னமோ, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் அப்படிப்பட்ட நிறுவனத்தை தேசியமயமாக்கி விட்டார். உடன் திரு. JRD டாட்டா அவர்கள் பிரதமரை சந்தித்து இப்போது இலாபம் ஈட்டிவரும் இந்த நிறுவனம் அரசின் பல தவறான கொள்கைகளால் தொடர்ந்து எப்படி இலாபம் ஈட்ட முடியும் என்று கேட்டிருக்கிறார்.
கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுப்பது தொடர்பாக ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்களுக்கு பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிஸன்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர்.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 7) மிகச் சிறப்பாக நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் திரு.செல்லமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூரில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரம் நடலாம்.
கேன்சர் நோயைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, அதற்கான காரணிகளையும், அதனால் உண்டாகும் அபாயங்களை நவீன சமுதாயம் எப்படி குறைக்க முடியும் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார்...
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25 முதல் ஜனவரி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உட்பட 88 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும், எங்கே ஏமாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ, அங்கே எரிச்சல் தானாகவே வேகத்தடையாகக் குறுக்கிடும். காத்திருக்கப் பொறுமையில்லாமல் கவனம் சிதறும்.
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு (Velliangiri Uzhavan Producer Company Limited) தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. ‘சிறந்த நிர்வாக திறன் படைத்த எஃப்.பி.ஓ’ என்ற பிரிவில் (Best Performing FPO under the category 'Governance') இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பாரத கலாச்சாரம் ஆன்மீகத்தில் ஊறி வளர்ந்த கலாச்சாரம். நமக்கு சொர்க்கத்திற்கு போகும் ஆசை இல்லை. நமக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. நாம் எப்போதும் உண்மை தேடுதலில் இருக்குகிறோம்.
பெண் குழந்தைகளுக்கான தினமாக 2008, ஜனவரி 24ஆம் நாள் முதல் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க புதிய தலைமைக்கு பிரதமர் மோடி, சத்குரு உட்பட பலரும் வாழ்த்து.... பெண்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் கமலா ஹாரிஸ், தமிழ் வேர்களைக் கொண்டவர், இரண்டாம் தலைமுறை அமெரிக்கரின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள், இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தவர் கமலா என புகழாரம்....
பிரிஸ்பேனில் நடைபெற்ற விறுவிறுப்பான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணி இந்தியா ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்தியா கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.