அமெரிக்க புதிய தலைமைக்கு பிரதமர் மோடி, சத்குரு உட்பட பலரும் வாழ்த்து....

அமெரிக்க புதிய தலைமைக்கு பிரதமர் மோடி, சத்குரு உட்பட பலரும் வாழ்த்து.... பெண்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் கமலா ஹாரிஸ், தமிழ் வேர்களைக் கொண்டவர், இரண்டாம் தலைமுறை அமெரிக்கரின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள், இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தவர் கமலா என புகழாரம்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 21, 2021, 01:54 AM IST
  • கமலா ஹாரிஸ் இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தவர் என சத்குரு பாராட்டு
  • அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபர் நான் என ஜோ பைடன் சூளுரை
  • பதவியேற்பு விழாவில் 1000 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர்
அமெரிக்க புதிய தலைமைக்கு பிரதமர் மோடி, சத்குரு உட்பட பலரும் வாழ்த்து....  title=

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் (Joe Biden) பதவியேற்றார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சி Capitol Hill கட்டடத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்ஹ்டில் கொண்டு 1000 பேர் மட்டுமே விழாவில் கலந்துக் கொண்டனர்.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் ஃப்ளோரிடாவுக்கு சென்று விட்டார் பதவியில் இருந்து விலகிய டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump).  அமெரிக்க துணை அதிபர் பதவியில் இருந்து விலகிய மைக் பென்ஸ் (Mike Pence) பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் கலந்துக் கொண்டார்.

Also Read | அமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார்...

பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்திய தரப்பில் இருந்து பல தலைவர்களும், மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிபர், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தாலும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸுக்கு, இஷா மையத்தின் சார்பில் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் கமலா ஹாரிஸ், தமிழ் வேர்களைக் கொண்டவர், இரண்டாம் தலைமுறை அமெரிக்கரின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள், இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தவர் கமலா என்ற பொருள்படும் வாழ்த்தை சத்குரு தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு  (Kamala Harris) பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read | அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் & Tamil Nadu பூர்வீக கிராமம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News