Isha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

வாழ்வின் தீவிரம் தாண்டி வேறெதையுமே சிந்திக்காதவர். அச்சம், தயக்கம், என்ற எதுவுமே இன்றி எப்போதும் நெருப்புக் குழம்பு போல் தகித்தவர். இயற்கையின் விதிகளில் கூட அடங்காதவர். அவர் இப்படித்தான் என்று வரையறுக்க முடியாத, அறிவிற்குப் புலப்படாத, கட்டுக்கடங்காதவர் அவர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 25, 2021, 07:48 PM IST
  • வாழ்வின் தீவிரம் தாண்டி வேறெதையுமே சிந்திக்காதவர்.
  • அச்சம், தயக்கம், என்ற எதுவுமே இன்றி எப்போதும் நெருப்புக் குழம்பு போல் தகித்தவர். இயற்கையின் விதிகளில் கூட அடங்காதவர்.
  • அவர் இப்படித்தான் என்று வரையறுக்க முடியாத, அறிவிற்குப் புலப்படாத, கட்டுக்கடங்காதவர் அவர்.
Isha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion! title=

'இப்படி இருக்கவேண்டும்' என்று மனிதர்கள் எதற்கெல்லாம் எப்போதும் ஏங்கித் தவிக்கிறார்களோ, அது எல்லாவுமாகவே இருந்தவர் சிவன். தெரிந்தோ தெரியாமலோ மக்களின் ஒவ்வொரு ஏக்கமும் சிவனைப் போல் ஆகிவிடுவதாகவே இருக்கிறது. 

ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறை செய்ததையே செய்து, அவர்களைப் போலவே வாழ்வதற்கு அலுப்பாகி, புதிதாய் ஏதேனும் செய்ய முற்படும்... அதுவே அன்றைய ஃபேஷன் என்றாகி விடும். ஆனால் சிவனோ... முயற்சி செய்வதற்கு என்னெவெல்லாம் இருக்கிறதோ, அதெல்லாவற்றையுமே செய்தவர். சரி, தவறு என்பதெல்லாம் அவரிடம் இல்லை. உயர்நிலையை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதெல்லாமே செய்தவர்.

வாழ்வின் தீவிரம் தாண்டி வேறெதையுமே சிந்திக்காதவர். அச்சம், தயக்கம், என்ற எதுவுமே இன்றி எப்போதும் நெருப்புக் குழம்பு போல் தகித்தவர். இயற்கையின் விதிகளில் கூட அடங்காதவர். அவர் இப்படித்தான் என்று வரையறுக்க முடியாத, அறிவிற்குப் புலப்படாத, கட்டுக்கடங்காதவர் அவர்.

ALSO READ | பணம் வந்தால் துன்பமும் சேர்ந்து வருமா? - சத்குரு கூறுவது என்ன..!!!

யார் இந்த சிவன்?

பிறந்து கொஞ்சம் நாட்களாகி, நமக்கு கடவுள் அறிமுகமாகும் போது, முதல் அறிமுகம் நிகழும். சிவன், விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகர், முருகர்... அப்புறம் மெல்ல மெல்ல இன்னும் பலர். எக்கதை கேட்காவிட்டாலும், சிவனின் மனைவி பார்வதி என்றும் அவர்களின் பிள்ளைகள் விநாயகருக்கும், முருகனுக்கும் ஒரு மாம்பழத்திற்காக சண்டை வந்ததும், விநாயகர் சிவனையும் - பார்வதியையும் சுற்றினால் இவ்வுலகையே சுற்றி வந்ததாகும் என்றதும் நாம் நிச்சயம் கேள்விப் பட்டிருப்போம்.

கதைகளின் வாயிலாக பல உண்மைகளை நம் கலாச்சாரத்தில் வெளிப்படுத்தி இருந்தாலும், இன்று நமக்கு அவை வெறும் கதைகளாகவே தெரியும். சிவனையும் ஒரு கடவுளாகவே தெரியும். அவரிடம் செல்வம் இல்லை, எப்போதும் கண்மூடி தியானத்தில் இருப்பார், பாம்பை அணிந்திருப்பார், சாம்பலைப் பூசி இருப்பார்... இப்படி அவரைப் பற்றி நாம் கேட்ட எதுவுமே நாம் விரும்பும் அழகுநயம் பொருந்தியது அல்ல. இது போதாதென்று, அவரை அழிக்கும் சக்தி என்று வேறு வழங்குவார்கள். இருந்தாலும், சிறு வயதில் இருந்தே சிவனின் மீது பலருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டாவது என்னவோ உண்மை.

ALSO READ | பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது சரியா? – சத்குரு பதில்

அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள் மனிதர்கள் அல்ல, பூதகணங்கள். பார்ப்பதற்கு தெளிவான உருவம் கூட அவற்றிற்கு இருக்காது. இவர்களை விட்டால், யக்ஷர்கள். அவர்களும் உருவத்தால் ஈர்க்கக் கூடியவர்கள் அல்ல. அதோடு மட்டுமா? சிவன் மக்களிடையே வாழ்வதை விடுத்து, மயானத்திலே, அங்கிருக்கும் சாம்பலை தன் உடம்பெல்லாம் பூசிக் கொண்டு வாழ்ந்தவர். கோபம் வந்தால், பார்ப்பவரை கண்களாலேயே எரித்திடும் சக்தி கொண்டவர். ஆனால் மனமுருகி, அவரே கதி என்றாகிவிட்டால், நம் அன்பிற்குக் கட்டுப்படும் கருணை உள்ளம் கொண்டவர். தீவிர சந்நியாசி, ஆனால் சதியையும், பின்னர் அவளின் அம்சமாய் பிறந்த பார்வதியையும் மணந்தவர்.

இப்படி இவரைச் சுற்றி இருக்கும் எல்லாமே முரண்பாடுகள் தான். இவரை இதுதான் இப்படித்தான் என்று வரையறுத்திட முடியாது. அவரை புரிந்து கொள்ளவும் முடியாது. சாதாரண மனிதர்களிடம் இருந்து இப்படி வித்தியாசப்பட்டவர், உண்மையிலேயே இவ்வுலகில் வாழ்ந்தவர். வெறும் கற்பனைகளில் உதித்தவர் அல்ல. இவர் தான் ஆதியோகி. இவரே ஆதி குரு. யோகத்தின் மூலம். இவரது பெயர் யாருக்கும் தெரியாது. அதனால் இவர் எந்நிலையின் பிரதிபலிப்பாய் இருந்தாரோ, அதையே இவரது பெயராய் வழங்கிவிட்டனர்.

ALSO READ | நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ முடியுமா?.. சத்குரு கூறுவது என்ன.!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News