பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமாண்டோக்கள் ஒத்திகை செய்தனர். மதுரையில் தேசிய பாதுகாப்பு படையின் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் இந்த ஒத்திகைகளை மேற்கொண்டனர்...
தென்சீன கடலில் உரிமை கோரும் விவகாரத்தில் சீனாவுக்கும், பிலிப்பைன்சிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் சீனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
என்.எஸ்.ஜி.விவகாரத்தில் பிரதமரின் வெளிநாட்டு கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது:
அணுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா குறித்து எந்த முடிவும் எடுக்காமல் நிறைவடைந்தது. மோடியின் வெளியுறவுக்கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. வெளிநாடு பயணத்தின் போது அவர் என்ன செய்தார் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
சீனாவின் தொடர் பிடிவாதத்தால் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக இன்றைய முக்கிய கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை.
48 உறுப்பு நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால்கூட புதிதாக விண்ணப்பிப்பவர்கள் உறுப்பினராக முடியாது.அந்த வகையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவியில் ஆரம்பம் முதலே சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இன்றைய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை.
உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடக்க உள்ள எஸ்.சி.ஓ., மாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் அங்கு வந்துள்ள, சீன அதிபர் ஜி-ஜிங்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். என்.எஸ்.ஜி., (அணு ஆயுத சப்ளை குழு) விவகாரத்தில் சீனா ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இந்திய, சீன உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
என்.எஸ்.ஜி எனப்படும் அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் 48 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளன. இந்த குழுவில் இடம் பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. இதற்காக இந்தியா கடந்த மே 12-ம் தேதி விண்ணப்பித்தது. அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சியோலில் அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தின் போது இந்தியாவுக்கு அணு சக்தி வினியோக குழுவில் இடம் அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படாது என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இணைய இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. சீனா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அணு மூலப்பொருட்கள் விநியோக குழுவான என்.எஸ்.ஜி-ல் இந்தியா இணைந்தால் தெற்காசியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கும் சீன அரசுவின் ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைந்தால் தெற்காசியாவில் அணு ஆயுதப் போட்டி அதிகரிக்கும் என்று எழுதியிருந்தது.
நேற்று சீன அரசு மீண்டும் தனது குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
என்.எஸ்.ஜி. அமைப்பில் இந்தியா உறுப்பினராவதால் பாகிஸ்தானுடனான உறவில் சிக்கல் ஏற்படும். அணு ஆயுதப் போட்டி வலுவாகும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் அடங்கிய தெற்காசியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
சீன அரசின் செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் நாளிதழின் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
என்.எஸ்.ஜி. எனும் அணுசக்தி வழங்கும் குழுமத்தில் உறுப்பு நாடாக சேர வேண்டும் என்பது இந்தியாவின் கனவு. இதற்கான முயற்ச்சி இந்திய மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்பில் மொத்தம் 48 நாடுகள் உறுப்பினராக உள்ளது. இந்த அமைப்பில் உறுப்பு நாடாக சேர வேண்டும் என்றால் 48 நாடுகளும் ஆதரிக்க வேண்டும். அதாவது 48 நாடுகளுக்கும் மறுப்பு ஓட்டு அதிகாரம் உள்ளது. ஒரு நாடு மறுத்து விட்டாலும் உறுப்பினர் ஆக முடியாது என்ற நிலை உள்ளது.
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பு நாடாகவுதை சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ தற்போது ஆதரவு அளித்து உள்ளது.
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா முழுஆதரவையும் தெரிவித்தார். இந்தியாவிற்கு ரஷிய அதிபர் விளாடிமீர் புதினும் முழு ஆதரவை தெரிவித்து உள்ளார்.
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இடம்பெற ஆதரவு தெரிவித்துள்ளது மெக்ஸிக்கோ.
5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவர்கள் ஏற்கனவே அமெரிக்கா, கத்தார், ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்து என நான்கு நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு தனது பயணத்தின் இறுதி கட்டமாக இன்று மெக்சிகோ சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு 'பாரத் மாதா கி ஜெய்' என கூறி சிகப்பு கம்பள வரவேற்பளித்தனர்.
மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நீட்டோவும், பிரதமர் மோடியும் இருவரும் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இருவரும்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.