என்.எஸ்.ஜி. அமைப்பில் இந்தியா உறுப்பினராவதால் பாகிஸ்தானுடனான உறவில் சிக்கல் ஏற்படும். அணு ஆயுதப் போட்டி வலுவாகும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் அடங்கிய தெற்காசியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
சீன அரசின் செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் நாளிதழின் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்களுக்குள் அணு மூலப் பொருட்கள், அணுஉலை தொழில் நுட்பங்களை பரஸ்பரம் விநியோகம் செய்து கொள்கின்றன. இந்த கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஸ்ட்விட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் இந்தியா என்.டி.பி.டி எனப்படும் அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாததால் இந்தியாவுக்கு என்.எஸ்.ஜி.யில் இடம் பெற வாய்ப்பளிக்கக் கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியா உறுப்பினராவதால் பாகிஸ்தானுடனான உறவில் உணர்வு ரீதியான சிக்கல் ஏற்படும் என சீனா தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் அடங்கிய தெற்காசியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என சீனா எச்சரித்துள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணு சக்தி கொண்ட நாடுகள். இரு நாடுகளுமே பரஸ்பரம் மற்றொரு நாட்டின் மீது அணு ஆயுதம் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியா அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் உறுப்பினராவதால் பாகிஸ்தானுடனான உறவில் உணர்வு ரீதியாக சிக்கல் ஏற்படும்.
ஏற்கெனவே இருநாடுகளுக்கும் இடையே விரோத போக்கு உள்ள நிலையில் இந்தியா உறுப்பினராவது மேலும் சிக்கலை ஏர்படுத்தும். இந்தியா அணுசக்தி துறையில் எப்படியெல்லாம் மேம்படுத்திக் கொள்கிறதோ. அதில் சற்றும் குறையாமல் தானும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் பாகிஸ்தான் இருக்கிறது. இந்நிலையில், இந்திய உறுப்பினராவதால் இரு நாடுகளுக்கும் இடையேயான அணு ஆயுதப் போட்டி அதிகரிக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை சீனா பல்வேறு வகைகளில் இந்தியா, அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் உறுப்பினராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், முதன் முறையாக அதிகாரபூர்வமாக அரச நாளிதழின் தலையங்கத்தில் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.