என்.எஸ்.ஜி உறுப்பினராக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் ஆதரவு கேட்கிறது

Last Updated : Jun 9, 2016, 02:42 PM IST
என்.எஸ்.ஜி உறுப்பினராக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் ஆதரவு கேட்கிறது title=

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பு நாடாகவுதை சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ தற்போது ஆதரவு அளித்து உள்ளது.

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா முழுஆதரவையும் தெரிவித்தார். இந்தியாவிற்கு ரஷிய அதிபர் விளாடிமீர் புதினும் முழு ஆதரவை தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடாக சேர பாகிஸ்தானும் விண்ணப்பித்து உள்ளது. பாகிஸ்தான் அமெரிக்காவிடம் ஆதரவு கோரி உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் விவகாரத்திலே அமெரிக்காவில் கருத்து ஒற்றுமை கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் தோல்வியே கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஆதரவு அளித்தால் தான் இந்தியா அக்குழுவில் இணையமுடியும். ஆனால் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சீனாவின் ஆதரவின்றி அக்குழுவில்  சேர முடியாத நிலையே தற்போது உள்ளது.

Trending News