மன் கி பாத்: இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்- மோடி

ஜிஎஸ்டி குறித்து நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்த வரி குறித்து மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. ஜிஎஸ்டி பலன்கள் தெளிவாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. 

Last Updated : Jul 30, 2017, 03:38 PM IST
மன் கி பாத்: இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்- மோடி title=

‛மன் கி பாத்'  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது:- 

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். அங்கு மத்திய மாநில அரசுகள் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளன. மீட்பு படையினர் தன்னலமில்லாமல் உழைத்து வருகின்றனர். 

இயற்கை நமக்கு வாழ்க்கை கொடுக்கிறது, ஆனால் வெள்ளம், பூகம்பங்கள் ஒரு பெரிய அளவில் பேரழிவைத் தருகின்றன.

காப்பீட்டு நிறுவனங்கள் ஊக்கமளிக்கின்றன. விவசாயிகளின் கூற்றுகள் விரைவாக தீர்வு செய்யப்பட்டு வருகின்றன.

குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டமிடல் செய்யப்படுகின்றன. 24x7 வெள்ள கட்டுப்பாட்டு ஹெல்ப்லைன் 1078 செயல்படுகிறது.

ஜிஎஸ்டி குறித்து நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்த வரி குறித்து மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. ஜிஎஸ்டி பலன்கள் தெளிவாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. 

தொழில் செய்வது எளிதாகியுள்ளது. நாடு மீதான நம்பிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தினசரி உபயோகபடுத்தப்படும் பொருட்கள் விலை குறைந்துள்ளது. 

அனைவருக்கும் முன்மாதிரியான திட்டத்தை அமல்படுத்தியுள்ளாம். இந்தியாவின் பலத்திற்கு ஜிஎஸ்டி உதாரணம்.

ஆகஸ்ட் மாதம் நமது வரலாற்றித்திற்கு சிறப்பான இடம் உள்ளது. ஆகஸ்ட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 

வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இந்த போராட்டத்தை மகாத்மா காந்தி ஆரம்பித்த போது முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த கட்டத்தில் இருந்த தலைவர்கள் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக செய்து காட்டினர். போராட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டனர். 

நாடு சுதந்திரம் பெற்று 70 வருடங்களாகி விட்டன. நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்கின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்கவும், வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாம் பல சாதனைகள் படைத்துள்ளேம். அதேநேரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என அனைவரும் உறுதியேற்க வேண்டும். இதன்மூலம் 1947 போல் 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவாக உருவாக்க முடியும். 

2017 ஆண்டை தீர்மானத்திற்கான வருடமாக கருத வேண்டும். ஊழல், வறுமை, பயங்கரவாதம், ஜாதி, மதவாதம் ஒழிக்க வேண்டும் என உறுதியேற்போம். புது இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும். இதற்காக அனைத்து தனி நபர்களும் அமைப்புகளும் உறுதியேற்க வேண்டும். இளைஞர்கள், சுய உதவி குழுக்கள் ஆலோசனை நடத்த வேண்டும்.

இதற்காக அவர்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். நாம் போராடும் தருணத்தில் இல்லை என்றாலும், நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பால் நாம் முன்னேற வேண்டும் சுதந்திர தின உரை குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். 

விழாக்காலம் நெருங்கி வருகிறது. இதற்காக அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்த நாள் மூலம் ஏழை மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம். அவர்களுக்கு உதவுவோம். 

நம் நாட்டு மகள்கள் புதிய உயரத்தை தொட்டு நம்மை பெருமை படுத்துகிறார்கள்.

நான் சமீபத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சந்தித்தேன். உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் அவர்கள் சோகமாக இருந்தனர். ஆனால் இந்தியாவின் மக்கள் தங்கள் தோல்விகளை தங்கள் தோள்களில் எடுத்த முதல் முறையாக இருந்தது. அவர்கள் முழு நாட்டிலும் இதயங்களை வென்றனர். நான் மிகவும் திருப்தி அடைந்தேன்.

மீண்டும் சொல்கிறேன், நாம் இந்தியாவை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Trending News