வரும் நவம்பர் 9ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் ஏழைகளுக்கு வழங்கிய 57,000 கோடி ரூபாய் மானியத்தை தவறாக பயன்படுத்தப்பட்டது. மானியங்கள் என்ற பெயரில் கருவூலத்தைத் திருடுவதற்கு மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இப்போது எங்கள் கொள்கையால் அந்த ஊழல் கசிவு நிறுத்தப்பட்டது. காங்கிரஸில் உள்ள தலைவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியாது, அதனால் அவர்கள் என்னைத் தாக்கிப் பேசி வருகிறார்கள்.
ஊழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகுட்டுவார்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். ராஜீவ் ஊழல் நோயைக் கண்டுபிடித்த ஒரு டாக்டர் ஆவார். ஊழல் தான் காங்கிரஸ் கட்சியின் அடையாளம்.
இவ்வாறு பேசினார்.