பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு பதிவை பகிர்ந்த வழக்கில் நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதா எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்ததை, நான்கு வழக்குகளிலும் தனித்தனி பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வழங்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம் மீதான புகாரை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதுபோலவே நீதிபதிகளையும் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்
ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகவும், வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பில் சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நியமித்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.