இப்படியே போனா.. பக்கிங்காம் கால்வாய் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே இருக்கும்!

நீர்நிலைகளை அடையாளம் காண  திட்டம் துவங்கப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Shiva Murugesan | Last Updated : Sep 14, 2021, 05:05 PM IST
  • 1.17 ஹெக்டேர் பரப்பிலான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு.
  • வரலாற்று புத்தகத்தில் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும்தான் இருக்கும்
  • குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு.
இப்படியே போனா.. பக்கிங்காம் கால்வாய் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே இருக்கும்! title=

சென்னை: பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால், வரலாற்று புத்தகத்தில் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும் தான் இருக்கும் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சுதர்சனம் உயர்நீதிமன்றம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாதது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் மாதவரம் கிராமத்தில் உள்ள 1.17 ஹெக்டேர் பரப்பிலான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அதனை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, 'மாநகராட்சிக்கு மனுதாரர் புதிதாக மனு அளிக்கவும், அந்த மனுவின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

பின்னர் சென்னையில் மொத்தம் எத்தனை நீர் நிலைகள் உள்ளது? என மாநகராட்சி தரப்பில் ஆஜரானவர்களிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ALSO READ | தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; 2 பேர் பலி

அதற்கு பதில் அளித்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், நீர்நிலைகளை அடையாளம் காண  திட்டம் துவங்கப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை என்றும், அது ஒரு அருமையான கால்வாய், நீர்வழி போக்குவரத்திற்கான கால்வாய் என்றும், இதனை முறையாக சீர்படுத்தவில்லை என்றால், வரலாற்று புத்தகத்தில் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும்தான் இருக்கும் என வேதனை தெரிவித்த நீதிபதிகள்  நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

ALSO READ | மனைவி சுட்ட தோசை கருகியதால் தகராறு; விரக்தியில் கணவன் தற்கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News