சத்தான உணவை வழங்கும் முயற்சியில், 2020 ஏப்ரல் முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகளை விநியோகிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
பல தசாப்தங்களாக நீடித்துவந்த அயோத்தி சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கவுள்ள நிலையில்., மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கார் மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேச அமைச்சர் PC சர்மா செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் 'கன்னங்களுடன்' மாநில சாலைகளின் நிலைமைகளை ஒப்பிட்டு சர்ச்சை உண்டாக்கியுள்ளார்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் தனது வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானாவில் உள்ள நுஹிலிருந்து பிரச்சாரத்தின் கட்டளையை ஏற்றுக்கொண்டார்.
உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி ஞாயிற்றுக்கிழமை ஐந்து சட்டமன்ற இடங்களுக்கான வேட்பாளர்களை இடைத்தேர்தல்களுக்கு அறிவித்தது.
இந்தியா மட்டும் அல்ல, உலகம் எங்கிளும் காந்தி தொப்பி ஒரு அரிய காட்சி பொருளாக இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசத்தின் நர்சிங்க்பூரில் ஒரு பள்ளியில் குழந்தைகள் தினமும் காந்தி தொப்பியை அணிந்து வந்து ஒரு பயன்பாட்டு பொருளாக மாற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல், தினமும் காந்தியின் புகழ்பெற்ற பிரார்த்தனை பாடலான “வைஷ்னோ ஜனடோ தேனே கஹியேச் ....” பாடலையும் பாடுகின்றனர்.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அகில் குரேஷியை மத்திய பிரதேசத்திற்கு பதிலாக திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது!
காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடரும் சிக்கல்கள். முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவகுமாரை அடுத்து, காங்கிரசின் முக்கிய தலைவராக பார்க்கப்படும் கமல்நாத்துக்கு சிக்கல் அதிகரிக்க உள்ளது.
மத்திய பிரதேசத்தில் கட்சியின் தலைவராக யார் இருப்பார்கள் என்பது குறித்து காங்கிரசுக்குள் ஏற்பட்ட உள் மோதலுக்கு இடையே, சோனியா காந்தி புதன்கிழமை (செப்டம்பர் 11) கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.