பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெளியாகும் அயோத்தி தீர்ப்பு!

பல தசாப்தங்களாக நீடித்துவந்த அயோத்தி சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கவுள்ள நிலையில்., மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Nov 9, 2019, 10:33 AM IST
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெளியாகும் அயோத்தி தீர்ப்பு! title=

பல தசாப்தங்களாக நீடித்துவந்த அயோத்தி சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கவுள்ள நிலையில்., மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உத்தரபிரதேசத்தில் சனிக்கிழமை முதல் திங்கள் வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசாங்கம் விடுப்பு அறிவித்துள்ளது.

அதேவேளையில் கர்நாடகா, ஜம்மு, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளு இன்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் சில அரசுப் பள்ளிகள், பல தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளன.

4-க்கும் மேற்பட்டவர்களைக் கூட்டிச் செல்வதைத் தடைசெய்யும் CrPC-யின் பிரிவு 144, முழு கோவா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவுகள் மத்திய பிரதேச தலைநகர் போபால் மற்றும் பெங்களூரில் அமலில் இருக்கும். "பெங்களூரில் காலை 7 மணி முதல் 12 மணி வரை பிரிவு 144 CrPC விதிக்கப்பட்டுள்ளது" என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் சனியன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் மது பானங்கள் விற்பதற்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரின் காவல் ஆணையர் அஞ்சனி குமார், நகரத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பிற்காக சிறப்புப் பணிகள் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். "ஹைதராபாத்தில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கவும், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். நகரத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு வரிசைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாக உணர்திறன் கொண்ட ராம்ஜம்பூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் அதன் வரலாற்றுத் தீர்ப்பை வழங்கிய பின்னர் எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரித்துள்ளது.

Trending News