ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் தனது வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானாவில் உள்ள நுஹிலிருந்து பிரச்சாரத்தின் கட்டளையை ஏற்றுக்கொண்டார்.
திங்களன்று நுஹை அடைந்த ராகுல் காந்தி மத்திய அரசு, மாநில அரசை கடுமையாக விமர்ச்சித்து தனது உரையை முன்வைத்தார். மோடி ஜி மற்றும் கட்டர் ஜி ஆகியோரின் பேச்சுகளைக் கேட்கையில், ஒன்றன்பின் ஒன்றாக தவறான வாக்குறுதிகளை நம்மை நோக்கி வருவதை நம்மாள் பார்க்க முடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மத்தியில் பேசிய ராகுல் காந்தி பொதுமக்களிடம், 'எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது என்று சொல்லுங்கள்? மில்லியன் கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால் நான் அவர்களைப் போல முதலில் மனதைப் பற்றி பேச மாட்டேன். நான் முதலில் வேலையைப் பற்றி பேச விரும்புகிறேன். பின்னர் தான் மனதைப் பற்றி பேசுவேன்' என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் சொன்னதை எவ்வாறு செய்தேன், எப்படி செய்தேன் என்பதை மட்டுமே மக்களிடையே நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். அவ்வாறே தான் நான் சத்தீஸ்கர் மாநிலத்திலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் செய்தேன். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆல்வார் முதல் குர்கான் ரயில்கள், மேவாட் கால்வாய், IIT Nuh, கோட்லா ஏரி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. உங்கள் அனைவர் முன் நான் சத்தியம் செய்கிறேன், இந்த படைப்புகள் அனைத்தும் முடிந்த பிறகு காண்பிப்பேன். ஏனெனில் சாத்தியமில்லாதத் ஏதும் இல்லை என நம்புகிறவன், என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், 'அனைவரையும் இணைக்க தாங்கள் உழைப்பதாக பாஜக மற்றும் RSS கூறுதகிறது. இது முன்னர் பிரிட்டிஷாரின் வேலையாக இருந்தது. தற்போது பாஜக-வின் வேலையாக மாறியுள்ளது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் இந்த கொள்கையை பாஜக கைவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரிடம் கேட்டால், மோடி ஜி ஒரு மோசமான சூழ்நிலையை தங்களு ஏற்படுத்தியுள்ளதை ஒப்புக்கொள்வர் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.