13 மாநில இடைத்தேர்தல், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது!

13 மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவிருகும் இடைத்தேர்தலுக்கான 32 வேட்பாளர்களின் பட்டியலை பாரதிய ஜனதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

Last Updated : Sep 29, 2019, 05:03 PM IST
13 மாநில இடைத்தேர்தல், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது! title=

13 மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவிருகும் இடைத்தேர்தலுக்கான 32 வேட்பாளர்களின் பட்டியலை பாரதிய ஜனதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

செய்தி நிறுவனமான ANI தகவல்படி, 13 மாநிலங்களுக்கு மொத்தம் 32 பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.

அதாவது., அசாம், பீகார், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் நான்கு வேட்பாளர்கள் அசாமுக்கும், ஐந்து வேட்பாளர்கள் கேரளாவிற்கும், 10 உத்தரப்பிரதேசத்திற்கும். பீகார், சத்தீஸ்கர், மேகாலயா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றுக்கு தலா ஒரு வேட்பாளர் என பட்டியலை வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஒப்புதல் அளித்த பின்னர் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா மற்றும் புதுச்சேரி (தலா ஒரு தொகுதி) ஆகியவை அடங்கும். மற்ற மாநிலங்கள் அசாம் (4), பீகார் (5), குஜராத் (4), இமாச்சலப் பிரதேசம் (2), கேரளா (5), பஞ்சாப் (4), ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு (தலா இரண்டு) மற்றும் சிக்கிம் (3) ஆகியவையும் அடங்கும்

அக்டோபர் 21-ஆம் நாள் 17 மாநிலங்களின் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் பீகார் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி எடுக்கப்படும் என தெர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Trending News