எகிப்து மத்திய தரைக்கடலில் கப்பல் கடலில் மூழ்கி 42 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 600 பேர் கப்பலில் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பா நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எகிப்து நாட்டு கடல் எல்லையில் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது இதனால் பலர் உயிருக்கு போராடினர்.
இது குறித்த தகவல் எகிப்து கடற்படையினருக்கு கிடைத்ததும் அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துருக்கியின் சிஸ்ரேவில் வன்முறையை அடக்கும் சிறப்பு படைப்பிரிவின் தலைமையகத்தை குறிவைத்து குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கு அதிகமான பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது.
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கைலோமா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்
4 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 9.58 மணியளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
சிரியா நாட்டின் வடகிழக்கு நகரமான குர்திஷ் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெறிகிறது.
ஆணாதிக்க சக்திகளை கொண்ட இந்த சமூகம் மோசமானது என்ற சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளியிட்ட பாகிஸ்தானின் பிரபலமான நடிகை குவாண்டீல் பலோச் ‘ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் புயலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அதில் விர்ஜீனீயா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து விர்ஜீனியாவில் 44 பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முதல் தொடர்ந்து நடத்தப்பட்ட வெவ்வேறு என்கவுன்ட்டர்களில் இதுவரை 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் கொலை செய்துவிட்டு குற்றவாளி எந்த தடையும் இல்லாமல் தப்பிச் சென்றுள்ளான்.
இன்று காலை 6.30 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ஒரு பெண்ணிடம், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். இவர்களது பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அங்கிருந்து பெண் விலகிச் செல்ல முயன்றார்.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த கரனல்கஞ்ச பகுதியில் ஏழு வாலிபர்கள் கங்கை ஆற்று குளிக்கச் சென்றனர். இதில் சிவம் என்ற இளைஞர் செல்பி எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற மக்சூத் என்ற வாலிபர் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் நீரில் மூழ்கியதால், தொடர்ந்து அவரது நண்பர்கள் ஐந்து பேரும் ஆற்றில் குதித்தனர்.
கர்நாடக மாநிலம் குந்தாபூரில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பைந்தூரில் இருந்து குன்டாபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, டான் பாஸ்கோ பள்ளி மாணவ-மாணவிகள் ஏற்றிக் கொண்டு சென்ற மாருதி ஆம்னி வேன் மீது நேருக்கு நேர் மோதியதில்,பள்ளி மாணவிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 மாணவ-மாணவிகள் படுகாயமடைந்தனர். விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
மெக்சிகோ நாட்டில் சட்டவிரோதமான ஒரு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக ருபென் நுனெஸ் என்ற ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர் போலீசார். அந்நாட்டின் பிரதான ஆசிரியர் சங்க தலைவரான அவரை விடுவிக்ககோரி ஆசிரியர் சங்கத்தை ஏராளமானோர் ஓக்சாக்கா மாநிலத்தில் சாலை மறியில் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.என்.எஸ் கப்பலில் இருந்த கழிவு நீரை அகற்றும் பணியில் 4 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெளிப்பட்ட நச்சுக்காற்றால் நான்கு பேர் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நான்கு பேரில் ரஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீமோகன் தாஸ் என்ற இருவர் பலியாகினர். மற்ற இருவரின் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும் போது எதிர்புறத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து லாரி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்து பேருந்து மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரு காரும் சிக்கிக் கொண்டது. மோதிய வேகத்தில் வாகனங்கள் சிதறியடிக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.