கார், பேருந்து, லாரி மோதிக் கொண்டதில் 15 பேர் பலி

Last Updated : Jun 3, 2016, 04:43 PM IST
கார், பேருந்து, லாரி மோதிக் கொண்டதில் 15 பேர் பலி title=

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும் போது எதிர்புறத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து  லாரி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்து பேருந்து மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரு காரும் சிக்கிக் கொண்டது. மோதிய வேகத்தில் வாகனங்கள் சிதறியடிக்கப்பட்டன.

இதுவரை 15 பேர் பலியானதாக தகவல் வந்துள்ளது. 30-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குருபரபள்ளி அடுத்த மேடுமலை பகுதியில் நடைபெற்றது.

Trending News