பிரபலமான நடிகை குவாண்டீல் பலோச் ‘ஆணவக்கொலை

Last Updated : Jul 16, 2016, 02:38 PM IST
பிரபலமான நடிகை குவாண்டீல் பலோச் ‘ஆணவக்கொலை title=

ஆணாதிக்க சக்திகளை கொண்ட இந்த சமூகம் மோசமானது என்ற சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளியிட்ட பாகிஸ்தானின் பிரபலமான நடிகை குவாண்டீல் பலோச் ‘ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது இந்தியாவை தோற்கடித்தால் பாகிஸ்தான் தேசத்திற்காக நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பாகிஸ்தானில் இவ்விவகாரம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும் அந்த அணியின் கேப்டன் ஷாகிக் அப்ரிடியை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார். 

குவாண்டீல் பலோச் ’பேஸ்புக்’கில் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது அவரது சகோதரருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து இதுபோன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடாதே என்று அவரது சகோதரர் பலமுறை எச்சரிக்கை விடுத்தார். ஆனால் குவாண்டீல் அதனை கண்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து குவாண்டீல் பலூச் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரது சகோதரரே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார். 

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி சுல்தான் அசாம் பேசுகையில்:- குவாண்டீல் பலூச் கொலை செய்யப்பட்டு உள்ளார், அவருடைய சகோதரரால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இது ஆணவக்கொலையாகும் என்று கூறி உள்ளார். குவாண்டீல் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவருடைய உடலில் துன்புறுத்தியதற்கான எந்தஒரு அடையாளமும் இல்லை என்று மாவட்ட அதிகாரி கூறி உள்ளார். 

முன்னதாக குவாண்டீல் பலூச் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மீடியாக்களில் செய்தி வெளியானது. ஆனால் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தியில் குவாண்டீல் பலூச் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அவரை கொலை செய்த சகோதரர் வாசீம் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்திவரும் பாகிஸ்தான் போலீஸ் உடனடியாக குற்றவாளியை கைது செய்வோம்  என்று கூறிஉள்ளது. குற்றவாளி வாசீம்மை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

குவாண்டீல் பலோச் இந்த "ஆணவக்கொலை" பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

Trending News