சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடியார் பார்வையிட்ட அணிவகுப்பில் ஆந்திரா காவல்துறையினர் முதல் முறையாக பங்கேற்றனர்.
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார்.
நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம். ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா? இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தின விழாவை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 71வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்: அதில்,
செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
#WATCH Live: PM Modi addressing the nation on #IndependenceDayIndia at Red Fort, Delhi (Courtesy: DD) https://t.co/s1Ex6K1Npm
— ANI (@ANI) August 15, 2017
நாளை சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். சுதந்திர தின நாளில் அவர்களை நாம் போற்றுவோம். நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தான் நாம் முன்னேறுவதற்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.
அரசாங்கம் சட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும், வலுப்படுத்தவும் முடியும். ஆனால் அனைவருக்கும் சட்டத்தின் முன் கடமைப்பட்டிருப்பது தான் கடமை.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு துபாயில் உள்ள இந்தியாவை சேர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ரூ.26 லட்சம் செலவில் உலகின் மிக விலையுயர்ந்த ‘தங்கல் கேக்’ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கேக்கில் நடிகர் அமீர்கான் உருவம், படத்தில் அமீர்கானின் மகள்களாக நடித்த கீதா மற்றும் பாபிதா உருவம், தங்க பதக்கங்கள், இந்திய தேசியகொடி, புல், கொட்டகை, மணல் தளம் என தயாரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா உரையில் பாகிஸ்தானுக்கு கடுமையான தாக்குதலை கொடுத்த பிரதமர் மோடி ”பாகிஸ்தானை பயங்கரவாதம் ஊக்குவிக்கிறது,” என்று கூறிஉள்ளார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
சாமானியனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
இந்திய சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறார்.இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் துவங்கியது. முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
ஒடிசாவில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதன் முறையாக திருநங்கைகள் பாரம்பரிய உடையில் பங்கேற்க உள்ளனர்.
சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் இருந்தே தங்களின் உரையை நிகழ்த்துவதே மரபாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக திறந்து அரங்கிலேயே தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.