நாளை சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். சுதந்திர தின நாளில் அவர்களை நாம் போற்றுவோம். நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தான் நாம் முன்னேறுவதற்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.
அரசாங்கம் சட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும், வலுப்படுத்தவும் முடியும். ஆனால் அனைவருக்கும் சட்டத்தின் முன் கடமைப்பட்டிருப்பது தான் கடமை.
நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் ஜி.எஸ்.டி-யை ஏற்றுக் கொண்டதால் மக்கள் பொருளாதார செழிப்பு மற்றும் நலன்களைப் பெறுவார்கள். வரி செலுத்துவதில் தான் பெருமை. இது ஒவ்வொருவரின் "பொறுப்பு" இந்த உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்வட்ச் பாரத் பிரச்சாரத்தின் கீழ் ஒரு சுத்தமான இந்தியா உருவாக்க "தேசத்தை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை.
நாட்டில் இருந்து வறுமையை ஒழிக்கப்படும். 'புதிய இந்தியாவில்' வறுமைக்கு இடமில்லை.
புதிய இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைய நாம் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்