செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
#WATCH Live: PM Modi addressing the nation on #IndependenceDayIndia at Red Fort, Delhi (Courtesy: DD) https://t.co/s1Ex6K1Npm
— ANI (@ANI) August 15, 2017
பயங்கரவாதம், ஊழல், இனவெறி ஆகியவற்றிலிருந்து இந்தியா சுதந்திரமாக இருக்கவும், சுத்தமாக இருக்கும். இந்தியாவின் ஸ்வராஜ் கனவு நிறைவேறியது
நம் நாடு ஜி.பி.எஸ், சேட்டிலைட் மற்றும் பீம் பயன்பாட்டில் வசதிகள் பெருமை பெறலாம்.
பீகார், அசாம், மேற்கு வங்கம், ஒடிசா, வடகிழக்கு ஆகிய இடங்களில் நாங்கள் அதிக கவனத்தை செலுத்துகிறோம். இந்த பகுதிகளை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி வரி முறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி முறை அமலாவதற்காக பல்வேறு தரப்பினர் உழைத்துள்ளனர்.
தீவிரவாத ஒழிப்பில் ஒத்துழைக்கும் நாடுகளுக்கு நன்றி. ஜம்மு- காஷ்மீரை சொர்க்க பூமியாக மாற்ற முயற்சிக்க வேண்டும். வன்முறையாலும், துப்பாக்கிச் சூட்டாலும் காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ராணுவ வீரர்களின் சாதனைகளை தெரியப்படுத்த புதிய இணையதளம் தொடங்கப்படும்.
ஆதார் திட்டம் மூலமாக ஊழல் ஒழியும், வெளிப்படைத்தன்மை ஏற்படும். அரசு திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. அவை தாமதமானால் ஏழைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
தொழில்நுட்பம் மூலமாக அரசுக்கும், மக்களுக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி முறையால் உதய் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பான பலனை தந்துள்ளன.
வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர்மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பயிர் காப்பீடு திட்டத்தில் 6.75 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முத்தலாக்கை எதிர்க்கும் பெண்களை வணங்குகிறேன், அவர்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன்.
மகப்பேறு விடுப்பாக பெண்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. வேலைக்கு செல்வதை விட வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முத்ரா திட்டம் பெண்களுக்கு பலனளிக்கிறது.
மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. புதிய திசையை நோக்கி நாட்டை வழிநடத்தி வருகிறோம்.
இயற்கை பேரிடரால் இன்னல்களை சந்தித்து வருவது வேதனை அளிக்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறோம்.
அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகளாகும். புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். மனதில் நம்பிகையை விதைத்தால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும்.
நீர், நிலம், ஆகாயம் என எதிலும் எதிரிகளை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் ராணுவத்தின் சேவை அளப்பரியது.
நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினமும் ஒரே சமயத்தில் கொண்டாடுகிறோம்.
2022 க்குள் ஒரு புதிய இந்தியா படைத்திட நாம் ஒன்றினைந்து உறுதி ஏற்போம். நாட்டில் அனைவரும் சமம், நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மேலும் நாம் புதிய இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் பயணிக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர்களை வரவேற்கிறேன்.
ஊழல்வாதிகள் தலைதெறிக்க ஓடும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் பெரியவர், சிறியவர் என எவரும் இல்லை. சுதந்திரத்திற்காக போராடியவர்களை நினைவுகூர்வோம் நாம்.
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி 4-வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இவ்வாறு பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டெல்லியில் செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார்.
முன்னதாக காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கொடியேற்றினார். இதையடுத்து முப்படை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில் விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.