கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி கோவா மாநிலத்தின் பனாஜி, வால்போய் சட்டமன்ற தொகுதிகளுக்கும், டெல்லியின் பவானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் நந்தியாலா தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இடைத் தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
பனாஜி தொகுதியி தொடக்கம் முதலே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் முன்னிலை வகித்து வந்தார். நந்தியாலா தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தார்.
கோவா மாநிலத்தின் கேண்டலிம் பகுதியில் 50 வயது பெண் ஒருவரை நிர்வாண நிலையில் வீட்டின் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார்.
அந்த பெண் அடைத்து வைக்கபட்டு இருந்த அறையில் மின்சாரம் இல்லை. அந்த வீடு அவரது சகோதரர் வீடு என அது கூறப்படுகிறது. கதவின் சிறிய துவாரம் வழியாக அந்த பெண்ணுக்கு உணவு அளிக்கபட்டு வந்தது.
போலீசாரால் மீடகப்பட்ட அந்த பெண் மருத்துவபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். மீட்கபட்ட பெண்ணின் உறவினர்களிடம் போலீசார் அறிக்கைகள் பெறப்பட்டு உள்ளது.
கடந்த 15 வருடங்களாக அந்த பெண் அறியில் அடைத்து வைக்கபட்டு உள்ளார்.
ஜூலை மாதம் முதல் கோவாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுப்புற பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முற்றிலும் இயற்கையான பொருட்கள் பயன்பாட்டை, கோவா மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, கடற்கரை நகரம் என்பதால், உலகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் கோவா வந்து செல்கின்றனர்.
கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுபில் 22 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் அரசு தனது பெரும்பான்மை நிருப்பித்தது
கோவா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மனோகர் பரீக்கர் அரசு மீது கோவா சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
கோவாவில் ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்க முன் வந்தால் ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சைகள் தெரிவித்தனர்.
கோவா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மனோகர் பரீக்கர் அரசு மீது கோவா சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
கோவாவில் ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்க முன் வந்தால் ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சைகள் தெரிவித்தனர்.
கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் 14-ம் தேதி 4-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டன.
கோவா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், அங்கு பிற கட்சிகளுடன் இணைந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்கக் கோரியது பாஜக இதையடுத்து, ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், 22 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.