கோவாவின் வாஸ்கோ நகரில் உள்ள ஒரு கிராமபகுதியில், இன்று அதிகாலையில் ஒரு டேங்கரில் இருந்து அம்மோனியா விசவாயுக் கசிவு ஏற்பட்டதால் அந்த கிராமமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சுகாதார அறிக்கையின்படி, கிராம மக்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதையடுத்து அந்த கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பெண்கள் இந்த விஷவாயுவை சுவாசித்தனர். இதையடுத்து இருவரையும் அருகில் இருந்த மக்கள் விரைந்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
வாஸ்கோ சிட்டிக்கு அருகில் பனாஜியை இணைக்கும் நெடுஞ்சாலையில் அம்மோனியாவை சுமந்து சென்ற டாங்கர் வாகனத்தால் இந்த விசவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Ammonia gas leakage in Goa's Vasco city on airport –Chicalim road, two people hospitalized pic.twitter.com/DhscApm1KY
— ANI (@ANI) January 19, 2018