கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன் பெயரை தொடர்புபடுத்தி பேசிய ராமதாஸ், அந்த குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என திமுக எம்எல்ஏ உதயசூரியன் அறிவிப்பு,
பூம்புகார் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒருமையில் பேசி அவமரியாதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
திருவள்ளூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஆய்வுக்கு சென்ற போது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பதாக குடிமகன் சொன்ன புகாரின் பேரில் கடைக்கு சென்று விசாரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால், அவரை திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரம் விளக்குகள் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வத்தை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டு உள்ளார்.
நான் பாஜகவில் இணையவில்லை. அதேநேரத்தில் தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்- திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம்
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசை கண்டித்து, கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்தும், ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சபாநாயகர் தனபாலு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நேற்று மாலை தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து, உடனடியாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சென்னை வர வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் மு.க ஸ்டாலின், திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க படுகிறது.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் விதிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தி.மு.க., உறுப்பினர்கள் ஸ்டாலின், தியாகராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.