டாஸ்மாக் சென்று குடிமகனின் குறை தீர்த்த திமுக எம்எல்ஏ! வீடியோ வைரல்

திருவள்ளூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஆய்வுக்கு சென்ற போது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பதாக குடிமகன் சொன்ன புகாரின் பேரில் கடைக்கு சென்று விசாரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2022, 07:02 PM IST
  • குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்கிறார்கள்.
  • பொங்கி எழுந்த எம்எல்ஏவும் ஆதரவாளர்களும் டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.
  • கடை பணியாளரிடம் மிரட்டி கேட்கும் வீடியோ வைரல்.
டாஸ்மாக் சென்று குடிமகனின் குறை தீர்த்த திமுக எம்எல்ஏ! வீடியோ வைரல் title=

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மா பேட்டை பகுதியில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

அதனை பார்வையிட திருவள்ளூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்து கொண்டிருந்தார்.  

அப்போது அங்கு வந்த குடிமகன், அரசு டாஸ்மாக் கடையில் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்கிறார்கள். அதை கேட்க மாட்டீங்களா என மது போதையில் கேட்க , பொங்கி எழுந்த எம்.எல்ஏ., திமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட படைகளுடன் டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.

மேலும் படிக்க | எடுத்த காட்சிகள் சரி இல்லாததால் மீண்டும் எடுக்கப்படும் 'பொன்னியின் செல்வன்?

பின்னர் கடை பணியாளர்களிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு விற்கிறீர்கள்... ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்கிறீர்களா? என கேள்விகள் கேட்டார்.

ஒரு நாளைக்கு 500 பாட்டில் விற்பதாக ஊழியர் சொன்னதும், 5000 ரூபாய் சம்பாதிக்கிறீங்களா என கேட்டுவிட்டு, கடை சூப்பர்வைசரிடம் செல்போனில் பேசிய எம்எல்ஏ., வி.ஜ.ராஜேந்திரன்,  கூலி வேலை செய்துவிட்டு அதில் வரும் காசில் குடிக்க வருகிறார்கள், அவர்களிடம் கூடுதலாக பணம் வாங்கலாமா என கேட்டுவிட்டு, முதல்வருக்கு இது சம்பந்தமா புகார் தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது. திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ குடிமகன்களுக்காக போராடி உடனடி நடவடிக்கை எடுத்ததாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார், மே 23 முதல் ஹெல்மெட் கட்டாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News