சென்னை: ஆயிரம் விளக்குகள் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம் (DMK MLA KK Selvam) ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை அன்று மாலை டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அவர் பாஜகவில் இணைய போகிறார் என்ற செய்தி தீயாக பரவியது. ஆனால் திடீரென திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம், சில கோரிக்கைகளை வலியுறுத்த தான் ஜே.பி.நட்டாவை (JP Nadda) சந்தித்ததாகவும், மற்றப்படி நான் திமுக-வில் தான் இருக்கிறேன் என அதிரடியாக பேசினார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம், நான் பாஜகவில் இணையவில்லை. அதேநேரத்தில் தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் மற்றும் திமுக உட்கட்சி தேர்தலை மு.க.ஸ்டாலின் (MK Stalin) முறையாக நடத்த வேண்டும் என தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கட்டளையிடும் வகையில் பேசியிருந்தார்.
ALSO READ | பாஜக தலைவரை சந்தித்தேன்!! ஆனால் இணையவில்லை: அந்தர் பல்டி அடித்த KK செல்வம்
இந்த விவகாரம் திமுக (DMK) வட்டாரத்தில் பெரும் புயலைக்கிளப்பியது. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வாரம் கழித்து, ஆயிரம் விளக்குகள் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வத்தை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டு உள்ளார்.
அதுக்குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அது கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ? திமுக நிர்வாகிகளுடன் தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை