பாஜக தலைவரை சந்தித்தேன்!! ஆனால் இணையவில்லை: அந்தர் பல்டி அடித்த KK செல்வம்

நான் பாஜகவில் இணையவில்லை. அதேநேரத்தில் தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்-  திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 07:44 PM IST
பாஜக தலைவரை சந்தித்தேன்!! ஆனால் இணையவில்லை: அந்தர் பல்டி அடித்த KK செல்வம் title=

சென்னை: ஆயிரம் விளக்குகள் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம் (DMK MLA KK Selvam) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மாலை டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அவர் பாஜகவில் இணைய போகிறார் எனக்கூறப்பட்ட நிலையில், திடீரென திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம், சில கோரிக்கைகளை வலியுறுத்த தான் ஜே.பி.நட்டாவை (JP Nadda) சந்தித்ததாகவும், மற்றப்படி நான் திமுக-வில் தான் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. அதேநேரத்தில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த  திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம், நான் பாஜகவில் இணையவில்லை. அதேநேரத்தில் தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் மற்றும் திமுக உட்கட்சி தேர்தலை மு.க.ஸ்டாலின் (MK Stalin) முறையாக நடத்த வேண்டும் எனக் கூறினார். 

ALSO READ | பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ? திமுக நிர்வாகிகளுடன் தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

ஒருவேளை திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம் பாஜக-வில் இணைந்தால், கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் எடுக்கலாம் என திமுக தலைமை நினைத்திருந்தது. ஆனால் அவரின் அறிக்கையை அடுத்து, இதுவரை திமுக தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கை குறித்தும் தகவல் இல்லை. 

அதேபோல அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) வர உள்ளதால், திமுக தலைமை தன் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் போட்டியிடுவதில் சிரமம் ஏற்படும் என நினைத்து தான் திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம் பாஜக-வில் இணையவில்லை எனவும் கூறப்படுகிறது.  எப்படி இருந்தாலும், விரைவில் KK செல்வம் மீது திமுக நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

ALSO READ | முன்னாள் திமுக பொதுச் செயலாளர் துரைசாமி தமிழக பாஜகவில் இணைந்தார்

முன்னதாக, கு.க.செல்வத்திற்கு மாவட்ட செயலாளர் பதவி அளிக்காததால் தான், அவர் பாஜக-வில் இணையப்போகிறார் எனவும், அதனால் டுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) தலைமையில், கட்சியின் மூத்த முக்கிய தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

ஏற்கனவே திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News