உத்தரபிரதேச மாநிலம் பிஆர்டி அரசு மருத்தவக் கல்லூரியில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர் கதையாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்தவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்தது. அந்த வகையில் தற்போது நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதிக்குள் இதுவரை 58 குழந்தைகள் உயிரிழந்தன.
உயிரிழந்த 58 குழந்தைகளில் 32 பேர் 1 மாதத்தின் கீழ் உள்ளவர்கள் என்றும் மீதமுள்ள 26 பேர் 1 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் என்றும் சமூக நலத்துறை தலைவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். தாயம் என்ற படத்தின் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. அவருக்கு வயது 29.
கடந்த மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கோமாவில் இருந்து, 40 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டில் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மிகவும் இளம் வயதில் இவர் இறந்தது திரையுலகத்தினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
திருவண்ணாமலை கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வளர்மதி(46). சென்னை கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது, எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வளர்மதி ஏற்கனே 150 கிலோ எடைக்குமேல் இருந்ததாலும், அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததாலும் சிகிச்சை அளிக்காமல் போனதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குளித்தலை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர்.
குளித்தலை அருகே உள்ள கே.பேட்டை பகுதியில் மணல் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பயணம் செய்த 11 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் இன்று சென்னையில் காலமானார். 86 வயதான அசோகமித்திரன் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். தியாகராஜன் என்பது இவரது இயற்பெயர். 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்தராபாத் நகரில் பிறந்தவர். பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து குடியமர்ந்தார்.
1996-ம் ஆண்டு தனது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 18-வது அட்சக்கோடு, ஆகாசத் தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் இன்று சென்னையில் காலமானார். 86 வயதான அசோகமித்திரன் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். தியாகராஜன் என்பது இவரது இயற்பெயர். 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்தராபாத் நகரில் பிறந்தவர். பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து குடியமர்ந்தார்.
1996-ம் ஆண்டு தனது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 18-வது அட்சக்கோடு, ஆகாசத் தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா தீவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது.
லுகா விமான நிலையத்தில் இருந்து லிபியாவிற்கு புறப்பட்ட விமானமானது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிலேயே மோதி விபத்து ஏற்பட்டது. விமானம் தீப்பிடித்து எரிந்ததால் அந்த இடமே புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். இதில் பயணம் செய்த அதிகாரிகள் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.