காட்பாடி அருகே கஞ்சா வழக்கில் பிடித்து வந்த விசாரணை கைதி கை விலங்குடன் தப்பியோடிய நிலையில், தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே தாளப்பதி கிராமத்தில் உள்ள நெடுங்காளியம்மன் திருக்கோவில் பட்டியலில் இன மக்கள் உள்ளே சென்று வழிபட தடை விதிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
300 கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெற வந்த நோயாளியை அலட்சியமாக நடத்திய மருத்துவமனை நிர்வாகத்திற்கு நாகை நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் பணி புரியும் தனது மகனை அவரது முதலாளி சித்ரவதை செய்வதாகவும், இதனால் பாதிப்புக்குள்ளான தனது மகனை மீட்டு தமிழகம் கொண்டு வரவேண்டும் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
நீலாங்கரை அருகே இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய பெண் காவலரின் கையை தட்டி விட்டு ஆபாசமாக பேசியவருக்கு வித்தியாசமான நிபந்தனை ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
என்ன ஜெயில்ல கூட போடுங்க ஆனா மனைவி கிட்ட மட்டும் அனுப்பாதீங்க... தன்னை கண்டுபிடித்த போலீசாரிடம் ஒரு software இன்ஜினியர் சொன்ன வார்த்தைகள் தான் இவை. அப்படி என்ன நடந்தது பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்
கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டி கொலை செய்த பிரபல ரவுடி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தனது 7 வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாயின் கொடூர செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.