பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள உழவர் பட்ஜெட், மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் பட்ஜெட் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
உள்ளூர் நிலையில் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் , ஹரியானா அரசு பானிபட் மற்றும் கர்னல் நகரை மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கான முக்கிய மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
திரிபுரா முதல்வராக வரும் பிப்.,9 ஆம் நாள் பிப்லால் குமார் தீப் பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
சென்னையில் கூடுதலாக 200 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, இந்த சிறப்பு நடமாடும் மழைக்கால மருத்துவ முகாமை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
தமிழக காவல்துறையில் 4 திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு அளித்து முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்!
Chennai: Tamil Nadu CM Edappadi K. Palaniswami gave appointment order to four transgenders for joining TN police force pic.twitter.com/oHurueo5Ds
— ANI (@ANI) October 16, 2017
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று 30 கழிவு சுத்திகரிப்பு இயந்திரங்களின் முன்னோட்டத்தினை துவங்கி வைத்தார்.
இந்த 30 இயந்திரங்களில் கழிவு சேகரிப்பு லாரிகள், மரம் கத்தரித்து இயந்திரங்கள், சாலை துப்புரவு மற்றும் இதர துப்புரவு இயந்திரங்கள் என மொத்தம் 30 இயந்திரங்கள் அடங்கும்.
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu flagged off 30 solid waste management machines in Amaravati pic.twitter.com/WJBfxIzuhu
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் அங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைப்பெற்று வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி தங்களது அதிகாரங்களை பறிக்க முயல்வதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் உட்பட சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
துணைநிலை ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் மோதல் பிரச்சனையால் அரசு பணிகள் முடங்கின. பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.