தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கான்வாய் எனப்படும் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2021, 04:50 PM IST
  • ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றது முதலே பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.
  • பொதுவாக முதலமைச்சர் சாலையில் செல்லும் போது அவருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும்.
  • இதனால் அவசரமாக வேலைக்கு செல்லும் பலர் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு! title=

தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க சொல்லி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றது முதலே பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார். காலை வேளைகளில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் நடை பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்பவர்களிடம், அவர்களது குறைகள் கோரிக்கைகளை கேட்டு வருகிறார்.

cm

அதேபோல முதல்வரின் தனி பிரிவிற்கு முறையில் தானே நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும், அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளார். மேலும் அந்த கல்லூரிகளுக்கு ஆலயங்களின் பெயரையே சூட்டியுள்ளார்.

இதில் முக்கியமாக ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் அமையவிருக்கும் கலை அறிவியல் கல்லூரிக்கு மயிலை கபாலீஸ்வரர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க சொல்லி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  ஏனெனில், தான் பயணம் மேற்கொள்ளும் போது பொது மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

cm

பொதுவாக முதலமைச்சர் சாலையில் செல்லும் போது அவருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும்.  முதல்வரின் வாகனங்கள் வரும் போது சாலையின் இருபுறமும் மக்களை நிறுத்தி வைத்தவர்.  இதனால் அவசரமாக வேலைக்கு செல்லும் பலர் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.  தற்போது தமிழக முதல்வரின் இந்த உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ALSO READ முதலமைச்சர் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News