மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகையை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மட்டுமே ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் இருக்குமென பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் இன்றைய தினத்திற்குள் வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் தடையின்றி பால் வழங்க பால்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் இன்று முதல் 20 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்திட முதலமைச்சர் உத்தரவு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.