மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் கூறி உள்ளார்.
மேலும் படிக்க | மின்னஞ்சல் மூலம் இளம் பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய வாலிபர் கைது
இந்நிலையில், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு என்பதை தளர்த்தி வெள்ளம் பாகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் இருப்பிட சான்றிதழ், ஆதார் கார்டு, கடவு சீட்டு அளித்தால் அவர்களுக்கும் இந்த 6000ம் ரூபாய் இழப்பீடு வழங்கபடும் என்று முதலமைச்சர் அவர்கள் அதன் விதிமுறைகளை தளரத்த வேண்டும் என்று கேட்டுகொள்வதாக அனகபுத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருள்ளா பேட்டியளித்தார். சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியில் மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட 600 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, எண்ணை, பாய், புடவை உள்ளிட்ட நிவாரண பொருட்களை தமுமுக தலைவர் மற்றும் பாப்பனாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வழங்கினார்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாவஹிருல்லா, சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் பாதிக்கபட்டவர்கள் ஏராளமானோர் குடும்ப அட்டை இல்லாமலும் இருக்கிறார்கள், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு என்பதை தளர்த்தி வெள்ளம் பாகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் இருப்பிட சான்றிதழ், ஆதார் கார்டு, கடவு சீட்டு அளித்தால் அவர்களுக்கும் இந்த 6000ம் ரூபாய் இழப்பீடு வழங்கபடும் என்று முதலமைச்சர் அவர்கள் அதன் விதிமுறைகளை தளரத்த வேண்டும் என்று கேட்டுகொள்வதாகவும், சாலை ஓரம் வியாபாரிகள் குறு சிறு வியாபாரிகளும் பெரும்வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளதால் முதலமைச்சரின் உதவி கரம் தேவைபடுகிறது இவர்கள் பெரும்பாலும் காப்பீடு செய்யவில்லை, அதனால் காப்பீடு நிறுவனங்களில் வருவதற்கான வழியில்லை. எனவே இவர்கள் மீண்டும் தொழில் தொடங்குவதற்க்கு தமிழ்னாடு அரசு உரிய பரிசீலனை செய்து தாய் உள்ளத்தோடு முதலமைச்சர் அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது தங்களின் கோரிக்கை,
ஐயாயிரம் கோடியில் ஐந்தில் ஒரு பங்கை மற்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது ஆண்டு தோரும் ஒன்றிய அரசு ஒவொரு மாநிலத்திற்கும் பேரிடர் நிவாரண நிலையில் இருந்து வழங்க கூடிய ஒரு தொகை சில பல ஆண்டுகள் வராத சூழலில் நாம் கேட்டிருக்கு ஐயாயிரம் கோடியை தாண்டி ஒன்றிய அரசு வழங்க வேண்டும் அதுதான் நீதியாக இருக்க முடியும், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகளை மக்கள் மட்டும் அல்ல அரசாங்கமே ஆக்கிரமித்து உள்ளது பல்வேறு அரசு நிறிவனங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவை நீர் நிலைகளை ஆக்கிரமித்து உள்ளது. அரசு ஆக்கிமித்துள்ள பகுதிகள் அல்லது பெரும் முதலாளிகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அகற்ற மாட்டோம் என்ற திட்டத்தை அப்புறபடுத்திவிட்டு அனைத்து நீர்நிலைகலை கையகபடுத்துவேம் என்றால் மட்டுமே இதற்க்கு தீர்வாக இருக்கும் என்றார்.
மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: நிவாரண தொகை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ