புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் 1947- ல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி.
Where To Watch New Parliament Inaugration Ceremony: புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியால் நாளை (மே 28) திறக்கப்பட உள்ள நிலையில், அதன் நேரலை நாட்டின் அனைத்து பகுதியில் இருக்கும் மக்களும் எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, இந்திய குடியரசு தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கும் ஜெகன் ரெட்டியின் கட்சி, 'விழாவை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது' என்கிறார். மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல், ஒப்படைக்கப்பட்டது என்றார் அமித் ஷா.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இதில், எதிர்காலத்திற்கான அனைத்து தேவைகளை கருத்தில் கொண்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் ஜனவரி 31ஆம் தேதி நடைபெற இருக்கும், பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின், கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் படங்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ திட்டத்தின் வான்வழி காட்சிகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. ட்ரோன்கள் மூலம் படமாக்கப்பட்ட வான்வழி காட்சிகள் பிரம்மிப்பை ஊட்டுவதாக உள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மற்றும் பல்வேறு அமைச்சகங்களுக்கான கலப்பு வளாகத்தை மறுவடிவமைக்கும் அரசாங்கத்தின் மெகா திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.